நடிகர் விஜய் சேதுபதியை இன்னொரு சிவாஜி என்கிறார் பிரபல இயக்குநர்...

Published : Apr 09, 2019, 04:28 PM IST
நடிகர் விஜய் சேதுபதியை இன்னொரு சிவாஜி என்கிறார் பிரபல இயக்குநர்...

சுருக்கம்

தமிழ் சினிமா ரசிகர்களையும், விமர்சகர்களையும் சரியாய் இருகூறுகளாகப் பிரித்திருக்கும் ‘சூப்பர் டீலக்ஸ்’ படம் குறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் இதுவரை மூன்று ட்விட்கள் போட்டிருக்கும் இயக்குநர் சேரன் விஜய் சேதுபதியை நடிகர் திலகம் சிவாஜியுடன் ஒப்பிட்டு வம்பை விலை கொடுத்து வாங்கியிருக்கிறார்.

தமிழ் சினிமா ரசிகர்களையும், விமர்சகர்களையும் சரியாய் இருகூறுகளாகப் பிரித்திருக்கும் ‘சூப்பர் டீலக்ஸ்’ படம் குறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் இதுவரை மூன்று ட்விட்கள் போட்டிருக்கும் இயக்குநர் சேரன் விஜய் சேதுபதியை நடிகர் திலகம் சிவாஜியுடன் ஒப்பிட்டு வம்பை விலை கொடுத்து வாங்கியிருக்கிறார்.

கடந்த 29ம் தேதியன்று ரிலீஸான ‘சூப்பர் டீலக்ஸ்’ இதுவரை எந்த ஒரு தமிழ் சினிமாவும் சந்திக்காத இருவிதமான எக்ஸ்ட்ரீம் விக்மர்சனங்களை சந்தித்து வருகிறது. ஒரு தரப்பினர் தியாகராஜன் குமாரராஜாவை தெய்வம் என்றும் இன்னொரு பிரிவினர் சைத்தான் என்றும் கூறி வருகின்றனர்.

இந்நிலையில் 'சூப்பர் டீலக்ஸ்' பார்த்துவிட்டு  தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டிருக்கும் இயக்குநர் சேரன் விஜய் சேதுபதியை இன்னொரு சிவாஜி என்றிருக்கிறார். அவரது பதிவுகள் இதோ...

...வாழ்க்கை பற்றி சாமி பற்றி, எது நல்லது எது கெட்டது, யார் நல்லவர் யார் கெட்டவர் என நிறைய கேள்விகள் அவ்வப்போது நமக்கு தோன்றும். அதைதான் படமும் கேட்கிறது. உள்ளூர ஆயிரம் வக்கிரமங்களை அடக்கி வைத்திருக்கும் நம்முகம் காட்டுகிறது. கூவம் நம்மைச்சுற்றி ஓடவில்லை. நம்முள்தான் ஓடுகிறது.

முதலில் அரவாணியாக நடிக்க சம்மதித்தது. அதிலும் அரவாணிகளின் மறைக்கப்பட்ட தோற்றத்தை அப்படியே கண்முன் கொண்டுவர சம்மதித்து ஒப்பனையில் காட்டியது. தன்னை பற்றிய இமேஜ் பற்றி கவலைப்படாமல் தன் தொழில், திறமை மீது மட்டும் நம்பிக்கை வைத்த அந்த நடிகன்.. சல்யூட் விஜய்சேதுபதிக்கு. இன்னொரு சிவாஜி.

ஆபாசவார்த்தைகள் காட்சிகள் இருந்தாலும் முற்றிலும் புறந்தள்ள முடியாத சினிமா தான் 'சூப்பர் டீலக்ஸ்'.காட்சிவடிவமைப்பு, ஒளிப்பதிவு,தேர்ந்தெடுத்த லொகேசன்கள் நடிகர் நடிகைகளின் தேர்வும் நடிப்பும்  என இயக்குனரின் உழைப்பு அபாரமாக தெரிகிறது..  அடுத்த 5வருடங்களில் இதுபோல சினிமாக்கள் அதிகம் வரும்...என்று இயக்குநர் சேரன் தெரிவித்துள்ளார்
 

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories

அப்பாவாக போகும் நாக சைதன்யா; சமந்தாவுக்கு கொடுக்கும் அதிரடி ஷாக்!
செத்துப் பிழைத்துள்ளேன், எதுவும் பேச விரும்பவில்லை: மனவேதனையுடன் செல்வராகவன் பேசிய உருக்கமான வீடியோ!