தங்கைக்காக திரையுலகிற்கு டா டா சொன்ன நடிகை கார்த்திகா எடுத்த அதிரடி முடிவு!

Published : Apr 09, 2019, 04:03 PM IST
தங்கைக்காக திரையுலகிற்கு டா டா சொன்ன நடிகை கார்த்திகா எடுத்த அதிரடி முடிவு!

சுருக்கம்

தமிழில் கதாநாயகியாக அறிமுகமாகும் நடிகைகள் அனைவரும், ரசிகர்கள் மனதில் இடம்பிடிக்கிறார்களா என்றால் அது சந்தேகம் தான். அந்த வகையில், கடந்த 2006 ஆண்டு வெளியான 'தூத்துக்குடி' படத்தில், கதாநாயகியாக அறிமுகமானவர் நடிகை கார்த்திகா.   

தமிழில் கதாநாயகியாக அறிமுகமாகும் நடிகைகள் அனைவரும், ரசிகர்கள் மனதில் இடம்பிடிக்கிறார்களா என்றால் அது சந்தேகம் தான். அந்த வகையில், கடந்த 2006 ஆண்டு வெளியான 'தூத்துக்குடி' படத்தில், கதாநாயகியாக அறிமுகமானவர் நடிகை கார்த்திகா. 

இந்த படத்தில் 'கருவாப்பையா... கருவாப்பையா... என்கிற பாடம் மூலம் 
ரசிகர்கள் மத்தியில் நீங்காத இடத்தை பிடித்தார். மேலும், 'பிறப்பு' படத்தில் இடம்பெறும் 'உலக அழகி நான் தான்' என்கிற பாடலும் மிகவும் பிரபலம். 

இந்த படங்களை தொடர்ந்து, ராமன் தேடிய சீதை, தைரியம், மதுரைசம்பவம், 365 காதல் கடிதம், வைதேகி, நாளைய பொழுதும் உன்னோடு போன்ற படங்களில் நடித்தார்.

இந்நிலையில் இவரின் தங்கை படிப்பிற்காக திரையுலகிற்கு சிறிது காலம் டா டா காட்டி விட்டு மும்பை பறந்தார்.

தற்போது தங்கையின் படிப்பு முடிந்து,  சென்னை திரும்பிய  கார்த்திகா பிரபல மால் ஒன்றில் படம் பார்க்க சென்றுளார். அங்கு அவரை அடையாளம் தெரிந்துகொண்ட ரசிகர்கள் கருவாப்பையா கார்த்திகா என்று சூழ்ந்து கொண்டார்களாம். தன்னை மறக்காத ரசிகர்களை கண்டு மகிழ்ச்சியடைந்த கார்த்திகா மீண்டும் திரைப்படங்களில் நடிக்க முடிவு செய்து விட்டாராம்.

தொலைக்காட்சி தொடர்களில் நடிக்க அழைப்பு வந்தும், அதனை மறுத்து விட்ட கார்த்திகா, நடித்தான் வெள்ளித்திரையில் தான் நடிப்பேன் என அடம்பிடித்து வருகிறாராம். மேலும் சில இயக்குனர்களும் இவரை சந்தித்து கதை சொல்லி வருகிறார்களாம். 

விரைவில் நல்ல கதையம்சம் கொண்ட, படங்களில் தன்னை ரசிகர்கள் மீண்டும் பார்க்கலாம் என உறுதியாக கூறுகிறார் கார்த்திகா.   

 

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories

வாழ்க்கையில் ஒரேயொரு பொய் சொன்னதற்காக வருத்தப்படும் கோமதி: உண்மையின் அடையாளம்!
5000 ரூபாயுடன் சினிமாவுக்கு வந்தவர்! 5 நிமிடத்திற்கு 3 கோடி வாங்கும் நடிகை யார்?