சொகுசு விடுதியில் ஆண்கள் - பெண்களை வைத்து பிரைவேட் பார்ட்டி... வசமாக சிக்கிய ஷங்கர் பட துணை நடிகை..!

Published : Jul 20, 2021, 11:23 AM IST
சொகுசு விடுதியில் ஆண்கள் - பெண்களை வைத்து பிரைவேட் பார்ட்டி... வசமாக சிக்கிய ஷங்கர் பட துணை நடிகை..!

சுருக்கம்

சொகுசு விடுதியை வாடகைக்கு எடுத்து, அதில் சினிமா பாணியில்... ஆண்கள் - பெண்களுக்கான மது பார்ட்டி நடத்தி கல்லா கட்டி வந்த பிரமாண்ட இயக்குனர் ஷங்கரின் படத்தில் நடித்த துணை நடிகை போலீசாரிடம் வசமாக சிக்கியுள்ளார்.

சொகுசு விடுதியை வாடகைக்கு எடுத்து, அதில் சினிமா பாணியில்... ஆண்கள் - பெண்களுக்கான மது பார்ட்டி நடத்தி கல்லா கட்டி வந்த பிரமாண்ட இயக்குனர் ஷங்கரின் படத்தில் நடித்த துணை நடிகை போலீசாரிடம் வசமாக சிக்கியுள்ளார். இதுகுறித்து மொத்தம் 16 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மேலும் செய்திகள்: அமெரிக்காவில் இருந்து வந்த ரஜினிக்கு மகள் சௌந்தர்யா கொடுத்த இன்ப அதிர்ச்சி..! மீண்டும் தாத்தாவாகும் தலைவர்..!
 

நட்சத்திர ஹோட்டல்களில் பப் என்கிற பெயரில்... ஆட்டம் பாட்டம் நிகழ்ச்சிகள் நடத்துவதும், அதில் வசதி படைத்த ஆண்கள் - பெண்கள், சினிமா பிரபலங்கள் சிலர் கலந்து கொள்வதும் வழக்கமான ஒன்று தான். ஆனால் தற்போது கொரோனா பேரிடர் காலம் என்பதால் இதுபோன்ற நிகச்சிகள், பிரைவேட் பார்ட்டிகள் தடை செய்யப்பட்டுள்ளது. மீறி இதுபோன்ற நிகழ்ச்சிகள் நடந்தால் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என காவல் துறையினரும் எச்சரித்துள்ளனர். 

இந்நிலையில் சென்னை கானத்தூரில் எல்.ஆர் பார்ம் என்ற சொகுசு விடுதியை, வாடகைக்கு எடுத்த கவிதா ஸ்ரீ என்கிற துணை நடிகை,  கொரோனா விதிகளை மீறி, அங்கு சுமார் 30 க்கும் மேற்பட்ட ஆண்கள் - பெண்களுடன் சினிமா பாணியில் உயர் ரக மதுக்களுடன் பிரைவேட் பார்ட்டி ஏற்பாடு செய்து, கல்லா கட்டி வந்துள்ளார். இந்த பார்ட்டியில் கலந்து கொள்ள ஆண்களுக்கு மட்டும் நுழைவு கட்டணமாக 1999 ரூபாய் பெறப்படுவதாகவும், பெண்களுக்கு என்ட்ரி ஃபிரீ என்று கூறப்படுகிறது. 

மேலும் செய்திகள்: அஸ்தமிக்கும் சூரிய ஒளியில்... கடல் நீரில் விளையாடிய கீர்த்தி சுரேஷ்..! ராமேஸ்வரத்தில் செம்ம லூட்டி..!
 

அங்கு வரும் பெண்கள் மீது காசை வாரி இறைத்து பார்ட்டியை என்ஜாய் செய்துள்ளார். இதுகுறித்து சென்னை காவல்துறை கட்டுப்பாட்டு அறைக்கு கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில் கானத்தூர் போலீசார் கடந்த சனிக்கிழமை அதிரடியாக சோதனை நடத்தி வருவாய்த்துறை அதிகாரிகள் மூலம் இந்த சொகுசு விடுதிக்கு சீல் வைத்துள்ளனர்.

மேலும் செய்திகள்: நாளைக்கு என்ன நடக்கும்னு தெரியாது..! மருத்துவமனையில் இருந்து வீடு திரும்பிய அர்ச்சனாவின் எமோஷ்னல் பதிவு..!
 

'காதலன்' படத்தில் போலீஸ் அதிகாரியாக நடித்த நடிகை கவிதாஸ்ரீ என்பவர் ஏற்பாட்டில் தான் இவை அனைத்தும் நடந்தது கண்டுபிடிக்க பட்டது, பின்னர் கவிதா ஸ்ரீ உட்பட 16 பேர் மீது போலீசார் கொரோனா விதிகளை மீறியதாக வழக்கு பதிவு செய்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. 

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories

Gladiators Trailer: AK ரசிகர்களுக்கு இன்று 6:40 PM டிரீட்..தியேட்டரில் அதிரப்போகும் கிளாடியேட்டர்ஸ் டிரைலர்
Vishwanath and Sons Collection: சூர்யா ரசிகர்களுக்கு செம குட் நியூஸ்! விஸ்வநாத் அண்ட் சன்ஸ் வசூலில் வேற லெவல் சாதனை!