'நரகாசுரன்' படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு..!

By manimegalai a  |  First Published Jul 19, 2021, 7:50 PM IST

தாற்போது தனுஷின் D43 படத்தை இயக்கி வரும், கார்த்திக் நரேன் இயக்கத்தில் உருவாகியுள்ள 'நரகாசுரன்' படத்தின் ரிலீஸ் குறித்த தகவல் தாற்போது உறுதி செய்யப்பட்டுள்ளது.
 


தாற்போது தனுஷின் D43 படத்தை இயக்கி வரும், கார்த்திக் நரேன் இயக்கத்தில் உருவாகியுள்ள 'நரகாசுரன்' படத்தின் ரிலீஸ் குறித்த தகவல் தாற்போது உறுதி செய்யப்பட்டுள்ளது.

இயக்குனர் கார்த்திக் நரேன் தன்னுடைய முதல் படமான 'துருவங்கள் 16 ' படத்திலேயே வித்தியாசமான கிரைம் திரில்லர் படத்தை இயக்கி அனைவரையும் கவனிக்க வைத்தார். இவர் இந்த படத்தின் கதையை சற்றும் சுவாரஸ்யம் குறையாமல் கொண்டு சென்ற விதத்தை... பலரும் வியர்ந்து பாராட்டினர். இப்படம் நடிகர் ரகுமானுக்கும், சங்கமம் படத்தை தொடர்ந்து ஒரு ஐகான் போல் அமைந்தது என்றும் கூறலாம். 

Latest Videos

இந்த படத்தை தொடர்ந்து கார்த்திக் நரேன், நடிகர் அரவிந்த் சாமி, ஸ்ரேயா, சந்தீப் கிஷன், ஆத்மீகா ஆகியோர் நடித்த 'நரகாசுரன்' படத்தை இயக்கினார். ஆனால் நிதி பிரச்சனை காரணங்களால் இந்த படம் வெளியாவதில் தாமதம் ஏற்பட்டது. இப்படத்தின் பணிகள் முடிக்கப்பட்ட மூன்று வருடங்களுக்கு பின், ஓடிடி தளத்தில் 'நரகாசுரன்' படத்தை வெளியிட பேச்சு வார்த்தை நடந்து வந்ததாக கூறப்பட்டது.

இந்த தகவலை உறுதி செய்யும் விதத்தில் 'நரகாசுரன்' படத்தின் ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, ஆகஸ்ட் 13 ஆம் தேதி வெளியாகும் என தெரிவித்துள்ளார்.  கார்த்திக் நரேன் எடுக்கும் அனைத்து படங்களுமே வித்தியாசமான கதைக்களத்தை கொண்டவை என்பதால் இந்த படத்தின் மீதான எதிர்பார்ப்பும் ரசிகர்களுக்கு அதிகரித்துள்ளது.

'நரகாசுரன்' படத்தை தொடர்ந்து கார்த்திக் நரேன் இயக்கத்தில் அருண் விஜய் நடித்த 'மாஃபியா' திரைப்படமும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. இந்த படத்தை தொடர்ந்து தாற்போது தனுஷை வைத்து இன்னும் பெயரிடாத படத்தை இயக்கி வருகிறார். இந்த படத்தை மாளவிகா மோகனன் தனுஷுக்கு ஜோடியாக நடிக்கிறார். இந்த படத்தின் இறுதி கட்ட படப்பிடிப்பு தாற்போது ஹைதராபாத்தில் நடந்து வருவது குறிப்பிடத்தக்கது.

click me!