14 வயது சிறுமியை பற்றி பத்திரிக்கையாளர்கள் கேட்ட ஒரே ஒரு கேள்வி? பதில் சொல்ல முடியாமல் திணறிய பானுபிரியா?

Published : Jan 25, 2019, 03:42 PM ISTUpdated : Jan 25, 2019, 04:18 PM IST
14 வயது சிறுமியை பற்றி பத்திரிக்கையாளர்கள் கேட்ட ஒரே ஒரு கேள்வி? பதில் சொல்ல முடியாமல் திணறிய பானுபிரியா?

சுருக்கம்

பானுபிரியா 14 வயது சிறுமியை வீட்டு வேலைக்கு அமர்த்தி, சம்பளம் கொடுக்காமல் கொடுமை படுத்தி வந்தார் என கூறப்பட்ட புகாரை தெளிவுபடுத்தும் வகையில்  இன்று செய்தியாளர்களை சந்தித்து விளக்கம் கொடுத்தார்.  

பானுபிரியா 14 வயது சிறுமியை வீட்டு வேலைக்கு அமர்த்தி, சம்பளம் கொடுக்காமல் கொடுமை படுத்தி வந்தார் என கூறப்பட்ட புகாரை தெளிவுபடுத்தும் வகையில்  இன்று செய்தியாளர்களை சந்தித்து விளக்கம் கொடுத்தார்.

அப்போது பேசிய பானுபிரியா, சிறுமி தன்னுடைய வீட்டில் யாரும் இல்லாத நேரத்தை பயன் படுத்தி, சிறிது சிறிதாக 30 சவரன் அளவிற்கு தங்க நகைகளை திருடி அவருடைய அம்மாவிடம் கொடுத்து விட்டதாகவும், பின் சிறிய வகை கேமரா , இரண்டு வாட்ச் மற்றும்  செல்போன் உள்ளிட்ட எலக்ட்ரானிக் பொருட்களை கொடுத்ததாக குற்றம்சாட்டினார்.

இதுகுறித்து கேட்டதால், சிறுமியின் தாயார் போலீசில் பொய்யாக புகார் கொடுத்து விட்டதாக தெரிவித்தார். சிறுமியின் மீதும், அவருடைய தாய் மீதும் பல்வேறு குற்றங்களை அடுக்கிக்கொண்டிருந்த பானுபிரியாவிடம் பாரிக்கையாளர்கள் ஒரே ஒரு கேள்வி மட்டும் எழுப்பி அவரை திணற வைத்து விட்டனர்.

அதாவது, 18 வயது நிரம்பாத பெண்ணை எப்படி வேலைக்கு சேர்த்தீர்கள்? என்று கேள்வி எழுப்பினர்.  இதற்கு பதில் அளித்த நடிகை பானுபிரியா சிறுமியை அவருடைய தாயார் வேலைக்காக அழைத்து வந்தபோது அந்த பெண்ணின் வயது 16 மற்றும் 17 என மாற்றி மாற்றி கூறினார். 17 வயது பெண்ணை வேலைக்கு அமர்த்துவதும் தவறு என செய்தியாளர்கள் கூறியபோது, மிகவும் சாதாரணமாக ஒரு வயதுதான் வித்யாசம்... அந்த பெண்ணின் தாய் தான் வேலைக்கு அழைத்து சேர்த்து விட்டார். இதில் என்ன பெரிய தவறு இருக்கிறது என்பது போல் சாதாரணமாக பேசினார்.

இது குறித்து மேலும் மேலும் கேள்விகளை பத்திரிக்கையாளர்கள் எழுப்ப  கேள்விக்கு பதில் சொல்ல முடியாமல் திணறினார் நடிகை பானுபிரியா. பின் ஒருவழியாக ஏதேதோ பேசி சமாளித்தார். 

மேலும் தன்னுடைய சகோதரர் சிறுமியிடம் தவறாக நடந்து கொண்டார் என,  அந்த சிறுமியின் தாயார் கூறியுள்ள புகாருக்கு உரிய நடவடிக்கை எடுத்தே தீருவேன் என ஆவேசமாக கூறினார். 

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories

விஜய் முதல் கார்த்தி வரை... 2025-ம் ஆண்டு ‘ஜீரோ’ ரிலீஸ் உடன் ஏமாற்றம் அளித்த டாப் ஹீரோக்கள்
ஓவர் குஷியில் உண்மையை உலறிய ரோகிணி... கிரிஷின் அப்பாவாக மாறிய மனோஜ் - சிறகடிக்க ஆசை அப்டேட்