Premji : 1998ல் அவரும்.. நானும்.. Comparison பிக் போட்டு கணவரை கலாய்த்த இந்து - மாமனார் கண்ணில் பட்டுச்சு!

By Ansgar RFirst Published Jun 23, 2024, 8:56 PM IST
Highlights

Indhu Premji : பிரபல இசையமைப்பாளர் மற்றும் நடிகர் பிரேம்ஜி அமரன் அவர்களை, அவரது மனைவி இந்து பிரேம்ஜி கிண்டல் செய்து வெளியிட்ட பதிவு தற்பொழுது வைரலாக பகிரப்பட்டு வருகிறது.

தமிழ் சினிமாவில் 45 வயதை கடந்தும் பல ஆண்டுகளாக சிங்கிள் சிங்கமாக வாழ்ந்து வந்தவர் தான் பிரேம்ஜி அமரன். கடந்த 2006ம் ஆண்டு நடிகர் சிலம்பரசன் நடிப்பில் வெளியான "வல்லவன்" என்கின்ற திரைப்படத்தின் மூலம் தான் இவர் நடிகராக அறிமுகமானார். ஆனால் அதற்கு முன்னதாகவே சிறு வயது முதல் பல திரைப்படங்களில் இவர் பாடகராக பயணித்து வருகின்றார். 

தற்பொழுது தமிழ் திரையுலகில் நல்ல பாடகராகவும், இசையமைப்பாளராகவும், நடிகராகவும் இவர் வலம்வந்து கொண்டிருப்பது அனைவரும் அறிந்ததே. இறுதியாக தமிழில் கடந்த 2023 ஆம் ஆண்டு வெளியான "சத்திய சோதனை" என்கின்ற திரைப்படத்தில் நாயகனாக இவர் நடித்திருந்த நிலையில், தற்போது இவரது அண்ணன் வெங்கட் பிரபு இயக்கத்தில், தளபதி விஜய் நடித்து வரும் "தி கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம்" திரைப்படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகின்றார். 

Latest Videos

Soori : "எங்க படத்துக்கு கிடைத்த அங்கீகாரம்".. சூரியால் மெய்சிலிர்க்கும் SK - எமோஷனலாக அவரே வெளியிட்ட வீடியோ!

பல ஆண்டுகளாக சிங்கிளாக வாழ்ந்து வந்த பிரேம்ஜி அமரன், கடந்த ஜூன் மாதம் 9ம் தேதி, தனது 45வது வயதில் இந்து என்பவரை திருமணம் செய்து கொண்டார். இவருக்கும், இந்துவுக்கும் ஏறத்தாழ 20 வயது வித்தியாசம் என்று கூறப்படுகிறது. இவர்களுடைய திருமணம் திருத்தணியில் நடந்து முடிந்த நிலையில், இந்து பிரேம்ஜி, அவ்வப்போது தனது இன்ஸ்டாகிராம் பதிவில் பல ஜாலியான வீடியோக்களை தனது கணவரை வைத்து வெளியிட்டு வருவது அனைவரும் அறிந்ததே. 

 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Indhu PM (@indhu.premgi)

அந்த வகையில் கடந்த 1998ம் ஆண்டு தனது கணவர் எடுத்துக் கொண்ட புகைப்படத்தையும், அதே ஆண்டு எடுக்கப்பட்ட தன்னுடைய புகைப்படத்தையும் வெளியிட்டு, "நாம் இருவரும் ஏன் முன்பே சந்திக்கவில்லை" என்று ஏக்கத்தோடு கேட்டிருக்கிறார். அட நல்லா கலைச்சுட்டு லவ் டைலாக் இப்போ தேவையா என்று நெட்டிசன்கள் கிண்டலடித்து வருகின்றனர். 

நயன்தாராலாம் சும்மா.. ஹாலிவுட் நடிகைகளுக்கே டஃப் கொடுக்கும் அவுட் ஃபிட்டில் கீர்த்தி சுரேஷ்! அதிரி புரிதி போஸ்

click me!