Serial actress Jenniferr | தனது வளைகாப்பில் குத்தாட்டம் போடும் நடிகை ; வைரலாகும் வீடியோ

Kanmani P   | Asianet News
Published : Nov 17, 2021, 03:42 PM IST
Serial actress Jenniferr | தனது வளைகாப்பில் குத்தாட்டம் போடும் நடிகை ; வைரலாகும் வீடியோ

சுருக்கம்

பாக்கியலட்சுமி சீரியல் நடிகை ஜெனிஃபர் தனது வளைகாப்பு விழாவில் குத்தாட்டம் போடும் வீடியோ வைரலாகி வருகிறது.

பிரபல நடன இயக்குனர் சின்னாவின் மகள் நடிகை ஜெனிஃபர். பாரதிராஜா இயக்கிய ஈரநிலம் படத்தின் மூலம் ஹீரோயின்  அறிமுகமான ஜெனீஃபர் ராவண தேசம் உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார். இதை தொடர்ந்து பார்த்திபன் கனவு உள்ளிட்ட பல படங்களில் கவர்ச்சி பாடலுக்கு நடனமாடிய ஜெனிஃபர்  பல ரசிகர்களை கவர்ந்தார்.  அதற்கு பிறகு 2007 ல் கேமிராமேன் காசி விஸ்வநாதன் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.

திருமணத்திற்கு பிறகு நடிப்பிற்கு முழுக்கு போட்டிருந்த ஜெனிஃபர் மீண்டும் கடந்த 2013 ல் ரீ என்ட்ரி கொடுகையில் தனது உண்மையான பெயரான  தனது உண்மையான பெயரான ஜெனிஃபர்  பெயரிலேயே  சினிமாவில் நடித்து வந்தார்,. சில படங்களில் நடித்தார். தொடர்ந்து சில சீரியல்களிலும் நடித்தார். 

இதைத்தொடர்ந்து விஜய் டீவி சீரியலில் என்ட்ரி கொடுத்த ஜெனிஃபர் 'பாக்கியலட்சுமி' சீரியலில் ராதிகா என்கிற கதாபாத்திரத்தில் நடித்தார். இவர் நடிப்புக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்து வந்த நிலையில், இவர் சமீபத்தில் திடீர் என இந்த சீரியலை விட்டு விலகினார்.
தற்போது ஜெனிபர் இந்த சீரியலில் இருந்து விலகியதால்... அவருக்கு பதிலாக, பிக்பாஸ் பிரபலமான... ரேஷ்மா நடித்து வருகிறார். தான் ஜெனிஃபர் கர்ப்பமாக இருப்பதால் தான் சீரியலை விட்டு விலகியதாக அவரே விளக்கம் அளித்திருந்தார்.

பின்னர்  கர்ப்ப கால ஃபோட்டோக்களை வெளியிட்டு வந்தார் ஜெனிஃபர். சமீபத்தில் கர்ப்பகாலத்தில்  தண்ணீருக்கு அடியில் லிப்லாக் முத்தம் கொடுத்தபடி கணவன் - மனைவி எடுத்துக் கொண்ட ஃபோட்டோ செம வைரலானது.

இந்நிலையில் தற்போது ஜெனிஃபருக்கு வளைகாப்பு நடந்து முடிந்துள்ளது. அந்த விழாவில் எடுக்கப்பட்ட புகைப்படங்கள் வீடியோக்களை ஜெனிஃபர் பகிர்ந்து வருகிறார். அதில் தனது கணவர் மற்றும் உறவினர்களுடன் கர்ப்பிணியாக இருக்கும் ஜெனிஃபர் நடனமாடும் வீடியோ வைரலாகி வருகிறது.

 

 

 

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories

கால்பந்து ஜாம்பவான் மெஸ்ஸியை சந்தித்த பாலிவுட் ‘பாட்ஷா’ ஷாருக்கான் - வைரலாகும் வீடியோ
தனுஷை தொடர்ந்து விவாகரத்து சர்ச்சையில் சிக்கிய செல்வராகவன்..?