RNRManohar | திமுக மாநிலங்களவை உறுப்பினர் என்.ஆர்.இளங்கோவின் சகோதரர் நடிகர் மனோகர் காலமானார்!!

By Kanmani PFirst Published Nov 17, 2021, 1:21 PM IST
Highlights

திரைப்பட நடிகர், இயக்குனர் என பன்முகம் காட்டி வந்த ஆர் என் ஆர் மனோகர் உடல்நலக்குறைவால் இன்று உயிரிழந்தார்.

திமுக மாநிலங்களவை உறுப்பினர் என்.ஆர்.இளங்கோவின் சகோதரர் நடிகர் மனோகர் தமிழ் திரைப்பட இயக்குனர், எழுத்தாளர் மற்றும் நடிகராகவும் பணியாற்றுகிறார்.  இவர் 1994-ம் ஆண்டு மைந்தன் படத்தின் மூலம் எழுத்தாளராக அறிமுகமாகியுள்ளார். பின்பு 1995-ம் ஆண்டு கோலங்கள் திரைப்படத்தின் மூலம் நடிகராகவும் துணை இயக்குனராகவும் பணியாற்றியுள்ளார்.

பின்னர் 2009-ம் ஆண்டு நகுல் நடித்த மாசிலாமணி திரைப்படம் மற்றும் வேலூர் மாவட்டம் திரைப்படத்தினை இயக்கிய தன மூலம் இயக்குனராக உருவெடுத்தார். அதோடு இவர் சமீபத்தில் முன்னணி நடிகர்களின் படமான மிருதன், கைதி, டெடி உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்தவர்.

இதற்கிடையே கடந்த 2012ஆம் ஆண்டு இவருடைய மகன் ரஞ்சன் PSBB பள்ளியில் தான் படித்து வந்துள்ளார். இவரது மகன் ரஞ்சன் பள்ளியில் உள்ள நீச்சல் குளத்தில் பயிற்சி மேற்கொண்ட போது, தண்ணீரில் மூழ்கி உயிரிழந்தார்.   ரஞ்சன் நீரில் மூழ்கி  உயிரிழந்ததற்கு நீச்சல் பயிற்சியாளர் கவனக்குறைவே காரணம் என கூறப்பட்டது. பின்னர் அந்த நீச்சல் பயிற்சியாளர் மீது போலீசார் நடவடிக்கை எடுத்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இதையடுத்து மிகுந்த சோகத்தில் ஆழ்ந்திருந்த மனோகரன் இயக்கத்தை கைவிட்டு படங்களில் சிறு சிறு ரோல்களில் நடித்து வந்தார். இந்நிலையில் 61 வயதான இவர்  கொரோனாவால் பாதிக்கப்பட்டு தனியார் மருத்துவமனையில் கடந்த 20 நாட்களாக சிகிச்சை பெற்று வந்ததாக சொல்லப்படுகிறது.  இன்று காலை 8.30 மணியளவில்  மனோகரன் உயிர் பிரிந்துள்ளது.

இவரது இறப்பு குறித்து பதிவிட்டுள்ள இயக்குனர் மனோபாலா அவரது புகைப்படத்துடன் என்ன சொல்ல  என குறிப்பிட்டுள்ளார்.

 

என்ன சொல்ல.. pic.twitter.com/BS0A3vWbkA

— Manobala (@manobalam)

 

click me!