இந்த சமயத்தில் தான் இளம் நடிகை நிஹாரிகாவை பிரபாஸ் திருமணம் செய்து கொள்ள உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
தெலுங்கில் முன்னணி ஹீரோவாக வலம் வந்து கொண்டிருந்த பிரபாஸ், பாகுபலி முதல் மற்றும் இரண்டாம் பாகம் மூலம் ஒட்டுமொத்த இந்தியாவையே திரும்பி பார்க்க வைத்தார். இதன் மூலம் இளம் பெண்களின் கனவு நாயகனாக வலம் வர ஆரம்பித்தார். பாகுபலி படத்திற்கு பிறகு பிரபாஸுக்கு ரசிகர்களை விட ரசிகைகள் பட்டாளம் அதிகரித்துவிட்டது. தெலுங்கு திரையுலகின் சூப்பர் நாயகனான பிரபாஸ் யாரை திருமணம் செய்து கொள்ளப் போகிறார் என்பது தான் இப்போது டோலிவுட்டின் ஒட்டுமொத்த எதிர்பார்ப்பாக இருந்து வருகிறது.
இதையும் படிங்க: சத்தமே இல்லாமல் நடந்து முடிந்த ஆபாச நடிகையின் திருமணம்... அதிர்ச்சியில் உறைந்த ரசிகர்கள்...!
ஏற்கனவே பிரபாஸ் உடன் நிறைய படங்களில் நடித்த அனுஷ்காவுடன் காதலில் இருப்பதாக கூறப்பட்டது. பாகுபலி படத்தில் இருவருக்கும் இடையே இருக்கும் கெமிஸ்ட்ரியை பார்த்து கண்டிப்பாக இருவரும் திருமணம் செய்து கொள்வார்கள் என்று ரசிகர்கள் காத்திருந்தனர். ஆனால் இருவருமே நாங்கள் நல்ல நண்பர்கள் என்று வெளிப்படையாக தெரிவித்து வந்தனர். தற்போது அனுஷ்காவிற்கு மாப்பிள்ளை தேடும் படலம் தீவிரமாக நடைபெற்று வருகிறது.
இதையும் படிங்க:
இந்நிலையில் தெலுங்கு திரையுலகில் அதிக ஆதிக்கம் செலுத்தி வரும் மெகா ஸ்டார் சிரஞ்சீவி குடும்பத்திற்கு பிரபாஸ் மருமகனாக உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. தெலுங்கு சினிமாவில் இளம் நடிகையாக வலம் வருபவர் சிரஞ்சீவியின் தம்பி நாகபாபுவின் மகள் நிஹாரிகா. இவர் தமிழில் கூட விஜய் சேதுபதி உடன் “ஒரு நல்ல நாள் பார்த்து சொல்றேன்” படத்தில் நடித்துள்ளார். இதுவரை 5 படங்களில் நடித்துள்ள இவருக்கு பெரிதாக பட வாய்ப்புகள் அமையவில்லை. அதனால் இவரது பெற்றோர் திருமணம் செய்ய முடிவெடுத்துள்ளனர்.
இதையும் படிங்க: இந்துக்கள் என்ன இளிச்சவாய்களா?... ஜோதிகாவிற்கு சப்போர்ட் செய்த சீமானை வெளுத்து வாங்கிய விஜயலட்சுமி...!
இந்த சமயத்தில் தான் இளம் நடிகை நிஹாரிகாவை பிரபாஸ் திருமணம் செய்து கொள்ள உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. தயாரிப்பாளர், நடிகை என பன்முக திறமைகளைக் கொண்ட நிஹாரிகாவை பிரபாஸ் திருமணம் செய்து கொள்வதாக டோலிவுட் மற்றும் கோலிவுட்டில் தகவல்கள் ரவுண்டு கட்டுகின்றன. இந்நிலையில் “இந்த தகவல் முற்றிலும் பொய்யான என்று நிஹாரிகா மறுத்துள்ளார். இதுபோன்ற வதந்தியை பரப்புவது யார்? என்று தெரியவில்லை. இந்த வதந்திகளை மக்கள் நம்புவதும் எனக்கு வியப்பாக உள்ளது” என்று கூறியுள்ளார்.