'ஆணியே புடுங்க வேணாம்' எடுத்துக்காட்டோடு துல்கர் சல்மானுக்கு ஆதரவு தெரிவித்த பிரபல நடிகர்!

By manimegalai aFirst Published Apr 27, 2020, 8:07 PM IST
Highlights

சமீபத்தில் நடிகர் துல்கர் சல்மான் நடிப்பில் தமிழில் வெளியான 'கண்ணும் கண்ணும்' கொள்ளையடித்தல் திரைப்படம் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்ற நிலையில், துல்கர் சல்மான் தயாரித்து நடித்த “வரனே அவஷ்யமுண்டு” திரைப்படம் கடந்த 9ம் தேதி ரிலீஸ் ஆகியது. 

சமீபத்தில் நடிகர் துல்கர் சல்மான் நடிப்பில் தமிழில் வெளியான 'கண்ணும் கண்ணும்' கொள்ளையடித்தல் திரைப்படம் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்ற நிலையில், துல்கர் சல்மான் தயாரித்து நடித்த “வரனே அவஷ்யமுண்டு” திரைப்படம் கடந்த 9ம் தேதி ரிலீஸ் ஆகியது. இந்த படத்தில் மும்பையைச் சேர்ந்த பத்திரிகையாளர் ஒருவரின் புகைப்படத்தை பயன்படுத்திய விவகாரம் சர்ச்சையை கிளப்பியது. அதற்காக துல்கர் சல்மான் மன்னிப்பு கோரினார்.

மேலும் இந்த  படத்தில் தமிழர்களால் வீர தலைவராக பார்க்கப்படும், பிரபாகரன் பெயரை அவமதித்ததாக கூறி பிரச்சனை கிளம்பியுள்ளது. அதாவது இந்த படத்தில் சுரேஷ் கோபி வளர்க்கும்  நாய்க்கு பிரபாகரன் என பெயர் வைத்திருந்தனர்.

காமெடி காட்சி ஒன்றில் விடுதலைப் புலிகள் தலைவர் பிரபாகரன் பெயரை அவமதித்திருப்பதாக கூறி நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் கண்டனம் தெரிவித்திருந்தார். இந்நிலையில் அந்த படத்தில் பிரபாகரன் பெயரை பயன்படுத்தியதற்கான காரணத்தை கூறியுள்ள துல்கர் சல்மான், தமிழக மக்களிடம் மன்னிப்பும் கோரியுள்ளார். 

மேலும் செய்திகள்: துல்கர் மன்னிப்பு அவசியமில்லை..! அவர் தான் கேட்க வேண்டும்! பிரபாகரன் பெயர் சர்ச்சை: அதிரடி காட்டும் பிரபலம்!
 

இதைத்தொடர்ந்து இந்த விவகாரத்திற்கு தொடர்ந்து எதிர்ப்புகள் எழுந்து வரும் நிலையில், பிரபல தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி உள்ளிட்ட பலர் தன்னுடைய கண்டனங்களை எழுப்பி வந்த நிலையில், தற்போது பிரபல நடிகர் ஒருவர், துல்கர் சல்மானுக்கு ஆதரவாக ட்விட் செய்துள்ளார்.

இதுகுறித்து அவர் கூறியுள்ளதாவது, ’நம்ம ஊர்ல ‘ஆணியே புடுங்க வேணாம்’ மற்றும் ‘என்ன கொடுமை சரவணன் இது’ போன்ற பழைய படங்களில் வந்த வசனங்களை புதிய படங்களில் காமெடிக்கு பயன்படுத்துவது போல் பழைய மலையாள படம் ஒன்றில் வரும் நகைச்சுவை காட்சிதான் தற்போது சர்ச்சைக்குள்ளாகியுள்ளது.

மேலும் செய்திகள்: பள்ளி மாணவிகளை கூட விட்டுவைக்காத காசி வலையில் சிக்கிய பிரபல நடிகரின் மகள்! அடுத்தடுத்து வெளிவரும் பகீர் தகவல்!
 

அந்தப் பெயருக்குப் பின்னால் இருக்கும் உணர்வுகள் என்ன என்பது எனக்குப் புரிகிறது. ஆனால் தவறான புரிதலின் அடிப்படையில் அதனை புரிந்துகொள்ள வேண்டாம் மலையாள திரைப்படங்களைப் பார்த்திருக்கும் ஒரு தமிழனாக, அது எந்த அர்த்தத்தில் சொல்லப்பட்டது என்பது எனக்குப் புரிகிறது. மன்னிப்புக் கேட்டுக் கொள்கிறேன் துல்கர்” என்று பிரசன்னா கூறியுள்ளார். இதற்கு துல்கர் சல்மானும் தன்னுடைய நன்றிகளை அவருக்கு தெரிவித்துள்ளார்.

Namma oorla like how we use "aaniye pudingavenam" or "enna koduma saravanan" the name is used from a famous old film dialog. Dear ppl i understand the sentiment involved with the name but let's not spread hate based on misunderstanding. https://t.co/JlmCWJgk74

— Prasanna (@Prasanna_actor)

 

click me!