டாப் டிரெண்டிங்கில் தல அஜித்... 5 மில்லியன் ட்வீட்களுடன் தாறுமாறு வைரல்...!

Kanimozhi Pannerselvam   | Asianet News
Published : Apr 27, 2020, 07:10 PM IST
டாப் டிரெண்டிங்கில் தல அஜித்... 5 மில்லியன் ட்வீட்களுடன் தாறுமாறு   வைரல்...!

சுருக்கம்

இதற்காக அஜித் ரசிகர்கள் உருவாக்கிய #ThalaAJITHBdayGalaCDP என்ற ஹேஷ்டேக் மூலம் பிறந்தநாள் கொண்டாட்டத்தை தூள் கிளப்பினர். 

சோசியல் மீடியா பக்கங்களான ஃபேஸ்புக், ட்விட்டர், இன்ஸ்டாகிராம் என எதிலும் கணக்கு இல்லாவிட்டாலும் டாப் ட்ரெண்டிங்கில் மிரட்டுவதை தல அஜித்தை தவிர வேறு யாராலும் செய்ய முடியாது. எந்த பொது நிகழ்ச்சிகளிலும் பங்கேற்கமாட்டார், அரசியல் விவகாரங்களுக்கு கருத்து சொல்லமாட்டார். ஆனால் அது என்ன மேஜிக்கோ தெரியவில்லை அஜித்தின் அத்தனை சங்கதிகளும் ட்விட்டரில் ட்ரெண்ட் ஆகாமல் போவது இல்லை. 

வரும் மே 1ம் தேதி தல அஜித்தின் பிறந்தநாளை சிறப்பாக கொண்டாட அவரது ரசிகர்கள் திட்டமிட்டிருந்தனர். அதற்காக காமென் டி.பி. ஒன்றை வடிவமைத்திருந்த தல ஃபேன்ஸ், அருண் விஜய், சாந்தனு, ஆதவ் கண்ணதாசன், பிரேம்ஜி, ராகுல்தேவ், நடிகைகள் ஹன்சிகா, பிரியா ஆனந்த், ரைசா வில்சன், பார்வதி நாயர், ஆர்த்தி உள்ளிட்ட பிரபலங்கள் மூலம் வெளியிட ஏற்பாடுகள் செய்தனர்.

இந்நிலையில் அஜித் அலுவலகத்தில் இருந்து போன் செய்து கொரோனா கோர முகத்தை காட்டி வரும் இந்த இக்கட்டான சமயத்தில் கொண்டாட்டம் எதுவும் வேண்டாமே என்று கேட்டுக்கொண்டார்களாம். இதை ஏற்றுக்கொண்ட பிரபலங்கள் மற்றும் தல ரசிகர்கள் எவ்வித ஆர்ப்பாட்டமும் இல்லாமல் காமென் டி.பி.யை ட்விட்டரில் வெளியிட்டனர். 

இதையும் படிங்க: காதல் முதல் கல்யாணம் வரை... தல அஜித் - ஷாலினியின் இதுவரை பார்த்திராத அரிய புகைப்பட தொகுப்பு...!

இதற்காக அஜித் ரசிகர்கள் உருவாக்கிய #ThalaAJITHBdayGalaCDP என்ற ஹேஷ்டேக் மூலம் பிறந்தநாள் கொண்டாட்டத்தை தூள் கிளப்பினர். சுமார் 25 மணி நேரத்தில் 5 மில்லியன் ட்விட்டுகளை கடந்து, ட்ரெண்டிங்கிலும் முதலிடம் பிடித்துள்ளது. இந்த மகிழ்ச்சியான செய்தியையும் சேர்ந்து தல ரசிகர்கள் அதே ஹேஷ்டேக்கில் ட்ரெண்ட் செய்து வருகின்றனர். 

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories

ரஜினி ஒரு வருடம் காத்திருக்க தயாராக இருந்தும்... நீலாம்பரி கேரக்டர் வேண்டவே வேண்டாம் என தூக்கியெறிந்த நடிகை..!
அறந்தாங்கி நிஷாவின் பிரமிக்க வைக்கும் மாற்றம்: அழகுடன் சேர்ந்த ஆரோக்கியம்; 50 நாட்களில் நடந்த ஆச்சரியம்!