
தெலுங்கில் முன்னணி ஹீரோவாக வலம் வந்து கொண்டிருக்கும் பிரபாஸ், பாகுபலி முதல் மற்றும் இரண்டாம் பாகம் மூலம் ஒட்டுமொத்த இந்தியாவையே திரும்பி பார்க்க வைத்தார். இதன் மூலம் இளம் பெண்களின் கனவு நாயகனாக வலம் வர ஆரம்பித்தார். பாகுபலி படத்திற்கு பிறகு பிரபாஸுக்கு ரசிகர்களை விட ரசிகைகள் பட்டாளம் அதிகரித்துவிட்டது. தெலுங்கு திரையுலகின் சூப்பர் நாயகனான பிரபாஸ் யாரை திருமணம் செய்து கொள்ளப் போகிறார் என்பது தான் இப்போது டோலிவுட்டின் ஒட்டுமொத்த எதிர்பார்ப்பாக இருந்து வருகிறது.
ஏற்கனவே பிரபாஸ் உடன் நிறைய படங்களில் நடித்த அனுஷ்காவுடன் காதலில் இருப்பதாக கூறப்பட்டது. பாகுபலி படத்தில் இருவருக்கும் இடையே இருக்கும் கெமிஸ்ட்ரியை பார்த்து கண்டிப்பாக இருவரும் திருமணம் செய்து கொள்வார்கள் என்று ரசிகர்கள் காத்திருந்தனர். ஆனால் இருவருமே நாங்கள் நல்ல நண்பர்கள் என்று வெளிப்படையாக தெரிவித்து வந்தனர். தற்போது அனுஷ்காவிற்கு மாப்பிள்ளை தேடும் படலம் தீவிரமாக நடைபெற்று வருகிறது.
இதையும் படிங்க: யுவனை மதம் மாற்றினேனா?... ஆதாரங்களை வெளியிட்டு அதிரடி காட்டிய இளையராஜா மருமகள்...!
இந்நிலையில் தெலுங்கு திரையுலகில் அதிக ஆதிக்கம் செலுத்தி வரும் மெகா ஸ்டார் சிரஞ்சீவி குடும்பத்திற்கு பிரபாஸ் மருமகனாக உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. தெலுங்கு சினிமாவில் இளம் நடிகையாக வலம் வருபவர் சிரஞ்சீவியின் தம்பி நாகபாபுவின் மகள் நிஹாரிகா. இவர் தமிழில் கூட விஜய் சேதுபதி உடன் “ஒரு நல்ல நாள் பார்த்து சொல்றேன்” படத்தில் நடித்துள்ளார். இந்த வாரிசு நடிகையை தான் பிரபாஸ் மணக்க உள்ளதாக பரபரப்பு கிளம்பியது. சோசியல் மீடியாவில் தீயாய் பரவிய அந்த வதந்தி முற்றிலும் வதந்தி என நிஹாரிகா உண்மையை போட்டுடைத்தார்.
இதையும் படிங்க: சிம்புவிடம் இருந்து நயன்தாராவிற்கு தொற்றிய பழக்கம்... அப்போ கும்முனு ஆனதுக்கு இதுதான் காரணமோ?
தற்போது பாகுபலி படத்தில் வில்லனாக நடித்த ராணாவுக்கும் தொழிலதிபர் மிஹீகா பஜாஜுக்கும் திருமணம் நிச்சயிக்கப்பட்டுவிட்டது. இந்நிலையில் 40 வயதில் முரட்டு சிங்கிளாக வலம் வரும் பிரபாஸுக்கு எப்போது திருமணம் என கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு நான் நிச்சயம் திருமணம் செய்து கொள்வேன் என்றும், ஆனால் அது எப்போது நடக்கும் என்று தெரியவில்லை என பதிலளித்துள்ளார். இதையடுத்து அனுஷ்காவுடன் காதல் என்றும், வாரிசு நடிகை நிஹாரிகா திருமண நிச்சயதார்த்தமே முடிந்துவிட்டதாகவும் தகவல்கள் வெளியாகின்றன அதுபற்றி கேள்விக்கு அவை இரண்டுமே வதந்தி என்றும், என் திருமண விஷயத்தில் என்னை விட மீடியாக்களுக்கே அக்கறை அதிகமாக இருப்பதாகவும் சிரிப்புடன் பதிலளித்துள்ளார்.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.