மாமன்னன் படத்தை தமிழக அரசு தடைசெய்யனும்... உதயநிதியின் கடைசி படத்துக்கு போஸ்டர் ஒட்டி எதிர்ப்பு - இது எங்க?

By Ganesh A  |  First Published Jun 26, 2023, 12:03 PM IST

உதயநிதி ஸ்டாலின் நடிப்பில் வெளியாக உள்ள மாமன்னன் திரைப்படத்தை தடை செய்ய வேண்டும் என போஸ்டர்கள் ஒட்டியதால் பரபரப்பு நிலவியது.


இயக்குனர் மாரி செல்வராஜ் இயக்கத்தில் உதயநிதி ஸ்டாலின் கீர்த்தி சுரேஷ் வடிவேலு ஆகியோர் நடித்துள்ள திரைப்படம் மாமன்னன். இந்தத் திரைப்படம் வருகிற 29ஆம் தேதி திரைக்கு வர இருக்கிறது. திரை துறையில் உதயநிதி ஸ்டாலினின் கடைசி திரைப்படமாக இது இருக்கும் என்று கூறப்பட்டு வருவதால் இப்படத்திற்கான எதிர்பார்ப்பும் மக்கள் மத்தியில் அதிகரித்து உள்ளது.

இந்நிலையில் இந்த திரைப்படத்திற்கான இசை வெளியீட்டு விழா சில நாட்களுக்கு முன்பு நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் பேசிய மாமன்னன் திரைப்பட இயக்குனர் மாரி செல்வராஜ் தேவர் மகன் படம் குறித்த பேசிய பேச்சு சர்ச்சையை கிளப்பியது. அவரின் பேச்சுக்கு சமூக வலைதளங்களிலும் கடும் எதிர்ப்பு கிளம்பியது.

Tap to resize

Latest Videos

இதையும் படியுங்கள்... ரியாலிட்டி ஷோ மூலம் தொடங்கிய ஐஸ்வர்யா - உமாபதி காதல்... திருமணம் எப்போது? - தம்பி ராமையா தந்த சூப்பர் அப்டேட்

இந்நிலையில் மாரி செல்வராஜ் பேச்சுக்கு சிலர் தங்களது எதிர்ப்புகளை தெரிவித்து வந்த நிலையில் தேனி மாவட்டம் தேனி நகரில் மாமன்னன் திரைப்படத்தை உடனடியாக தடை செய்ய வேண்டும் என அகில இந்திய பார்வர்டு பிளாக் கட்சியின் சார்பாக தேனியில் போஸ்டர்கள் ஒட்டப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

மாமன்னன் படத்தை தடை செய்ய வேண்டும் என தேனியில் ஒட்டப்பட்டுள்ள போஸ்டர்கள் pic.twitter.com/HgYK9UpURh

— Asianetnews Tamil (@AsianetNewsTM)

தமிழகத்தில் ஜாதி மோதல்களை மாமன்னன் திரைப்படம் உருவாக்குகிறது. எனவே அதை உடனடியாக தடை செய்ய வேண்டும் என தமிழக அரசுக்கு கோரிக்கை வைக்கும் விதமாக போஸ்டர்கள் ஒட்டப்பட்டு இருக்கிறது. மேலும் போராட தூண்டாதே என்ற வாசகமும் இடம் பெற்றுள்ள போஸ்டர்கள் தேனி நகரில் முக்கிய பகுதிகளில் ஒட்டப்பட்டு இருக்கிறது.

இதையும் படியுங்கள்... நயன்தாரா பாணியில் தியேட்டருக்கு சர்ப்ரைஸ் விசிட்... மதுரை மக்களுக்கு இன்ப அதிர்ச்சி தந்த சுனைனா

click me!