
1996-ம் ஆண்டு வெளியான ‘பூவே உனக்காக’ என்னும் படத்தில் கதாநாயகியாக நடித்தவர் அஞ்சு அரவிந்த். சில காலமாக திரைத்துறையில் இருந்து விலகி இருந்த அவர், சமீபத்தில் தொலைக்காட்சியில் சேனல் ஒன்றுக்கு பேட்டி அளித்துள்ளார். அதில் அவர் தன்னுடைய தனிப்பட்ட வாழ்க்கை குறித்து பல விஷயங்களை பகிர்ந்துள்ளார். அவரது முதல் திருமணம் விவாகரத்தில் முடிந்த நிலையில், இரண்டாவது திருமணமும் சோகத்தில் முடிந்துள்ளது.
பேட்டியில் அவர் கூறியதாவது, “முதல் திருமணம் விவாகரத்தில் முடிந்த பின்னர் எல்லாம் சரியாகிவிடும் என்று நம்பி இரண்டாவதாக திருமணம் செய்து கொண்டேன். ஆனால் அந்தத் திருமணமும் சோகத்தில் முடிந்தது. வாழ்க்கை எதிர்பாராத பல திருப்பங்களை கொடுத்தது. திருமணம் முடிந்து சில நாட்களுக்குப் பின்னர் இரண்டாவது கணவரும் இறந்துவிட்டார். இதனால் கடுமையான மன அழுத்தத்திற்கு ஆளானேன். அதன் பிறகு வாழ்க்கை சில ஆச்சரியங்களை எனக்கு கொடுத்தது” என்று கூறினார்.
நீண்ட நாட்களுக்குப் பின்னர் தனது பள்ளி பருவத்து நண்பரான சஞ்சய் அம்பல பரம்பத் என்பவரை அஞ்சு சந்திக்க நேர்ந்துள்ளது. இந்த நட்பு பின்னாளில் காதலாக மாற, ஐந்து ஆண்டுகளாக பெங்களூரில் அவருடன் வசித்து வருகிறார் அஞ்சு. பள்ளி படிக்கும் பொழுது நடன வகுப்புகளில் இருவரும் சந்தித்துக் கொண்டுள்ளனர். மொபைல் போன்கள் போன்ற வசதி இல்லாததால் இருவருக்கும் இடையே இருந்த நட்பை தொடர முடியாமல் போனது. நீண்ட நாட்களுக்கு பின்னர் அவர்கள் சந்தித்துக் கொண்டுள்ளனர். தற்போது அவர் வாழ்க்கைத் துணையாக மட்டுமல்லாமல் அஞ்சு அரவிந்துக்கு மிகப்பெரிய ஆதரவாகவும் இருந்து வருகிறார்.
நடன ஆசிரியராக விரும்பிய அஞ்சுவுக்கு முழு ஆதரவை கொடுத்துள்ளார் சஞ்சய். இருவரும் இணைந்து பெங்களூரில் ‘அஞ்சு அரவிந்த் அகாடமி ஆஃப் டான்ஸ்’ என்கிற நடனப் பள்ளியையும் நடத்தி வருகின்றனர். தமிழில் வெளியான ‘96’ படத்தில் போல இவர்களின் கதை அமைந்துள்ளது. பள்ளியில் பிரிந்த நண்பர்கள் வாழ்க்கையில் மீண்டும் சந்தித்துள்ளனர். ஐடியில் பணியாற்றி வந்த சஞ்சய் இப்போது அதிலிருந்து ஓய்வு பெற்று சமூக சேவை மற்றும் எழுத்தில் கவனம் செலுத்தி வருகிறார். அஞ்சுவைப் போலவே அவரும் ஒரு நடன கலைஞராவார்.
அஞ்சுவின் மகள் அன்விகா தற்போது இடைநிலைப் பள்ளியில் படித்து வருகிறார். விவாகரத்து, இரண்டாவது கணவரின் இழப்பு ஆகியவற்றிலிருந்து மீண்டு வந்த அவர், வீட்டிலேயே முடங்கி விடாமல் தொடர்ந்து படங்களில் நடித்து வருகிறார். நடனப் பள்ளியையும் நடத்தி வருகிறார்.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.