வாக்கெடுப்பில் முதலிடம்..! ஆனால் மூன்றாவது பரிசா..? கொந்தளித்த குட்டி பூவையார் ரசிகர்கள்..!

Published : Apr 22, 2019, 04:50 PM ISTUpdated : Apr 22, 2019, 05:04 PM IST
வாக்கெடுப்பில் முதலிடம்..! ஆனால் மூன்றாவது பரிசா..? கொந்தளித்த குட்டி பூவையார் ரசிகர்கள்..!

சுருக்கம்

சூப்பர் சிங்கர் ஜூனியர் 6 ' நிகழ்ச்சியின் இறுதிச்சுற்றில் டைட்டில் வின்னராக ரித்திக் தேர்வு செய்யப்பட்டதால், கடும் கோபத்தில் உள்ளனர் பூவையாரின் ரசிகர்கள். இதற்கு காரணம் அதிக வாக்குகள் பெற்றும் ஏன் பூவையாருக்கு மூன்றாவது பரிசு என்பது தான்.

சூப்பர் சிங்கர் ஜூனியர் 6 ' நிகழ்ச்சியின் இறுதிச்சுற்றில் டைட்டில் வின்னராக ரித்திக் தேர்வு செய்யப்பட்டதால், கடும் கோபத்தில் உள்ளனர் பூவையாரின் ரசிகர்கள். இதற்கு காரணம் அதிக வாக்குகள் பெற்றும் ஏன் பூவையாருக்கு மூன்றாவது பரிசு என்பது தான்.

 

விஜய் தொலைக்காட்சியில் கடந்த ஆண்டு துவங்கப்பட்ட ஜூனியர் சூப்பர் சிங்கர் சீசன் 6, நிகழ்ச்சிகள் பல குழந்தைகள் பாடல் மூலம் தங்களுடைய திறமையை வெளிக்காட்டி வந்தாலும், அவர்களிடமிருந்து, தன்னுடைய கானா பாடல் மூலம் தனித்துவமாக அனைவராலும் அறியப்பட்டவர் பூவையார். நிகழ்ச்சிகள் முதற்கட்டமாக 21 பேரில் இருந்து இறுதிச் சுற்றுக்குள் நுழைந்த 4 பேரில் பூவையாரும் ஒருவர். இதில் ரித்திக், அனுஷா, சின்மயி ஆகியோரும் அடங்குவர். மேலும் வயல் கார்டு சுற்று மூலம் சூர்யா, அஹானா ஆகியோர் இறுதிச்சுற்றில் இணைந்தனர்.  

நேற்று மாலை சூப்பர் சிங்கர் ஜூனியர் சீசன் 6 ,  நிகழ்ச்சியின் கிராண்ட் ஃபைனல் நேரு உள்விளையாட்டு அரங்கில் பிரமாண்டமாக நடைபெற்றது.  இதில் நடிகர் விவேக் உள்ளிட்ட பல பிரபலங்கள் கலந்து கொண்டனர். சங்கர் மகாதேவன், சித்ரா, எஸ்பிபி சரண், கல்பனா, ஆகியோர் நடுவர்களாக இருந்தனர். 

இந்த நிகழ்ச்சியில் ஓட்டிங் அடிப்படையில் தான்,  வெற்றியாளர்கள் தேர்வு செய்யப்படுவார்கள் என ஓட்டிங் நடத்துவது வழக்கம்.  இதில் அதிகபட்சமாக வாக்குகள் பெற்ற பூவையாருக்கு மூன்றாவது பரிசு வழங்கப்பட்டுள்ளது பூவையாரின் ரசிகர்களை அதிர்ச்சியடைய வைத்துள்ளது.  இதனால் ஏன் பூவையாருக்கு மூன்றாவது பரிசு என பலரும் கேள்வி எழுப்பி வருகின்றனர்.

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories

நடமாடும் அரண்மனை! SRK-ன் பல கோடி ரூபாய் வேனிட்டி வேனுக்குள் இப்படியொரு வசதியா? மிரளவைக்கும் ரகசியம்!
மீண்டும் இணையும் மாஸ் கூட்டணி! 'அகண்டா 3' குறித்த அதிரடி அறிவிப்பு; கொண்டாட்டத்தில் பாலகிருஷ்ணா ரசிகர்கள்!