“தளபதி சைலண்ட் கில்லர் ப்பா”... ரசிகர்களுக்கே தெரியாமல் என்ன செஞ்சியிருக்கார் பாருங்க... கசிந்தது வீடியோ!

Kanimozhi Pannerselvam   | Asianet News
Published : Jan 16, 2021, 04:07 PM ISTUpdated : Jan 16, 2021, 04:08 PM IST
“தளபதி சைலண்ட் கில்லர் ப்பா”... ரசிகர்களுக்கே தெரியாமல்  என்ன செஞ்சியிருக்கார் பாருங்க... கசிந்தது வீடியோ!

சுருக்கம்

தற்போது தளபதி விஜய்யும் ரசிகர்களுடன் படம் பார்த்திப்பது தெரியவந்துள்ளது. அண்ணா சாலையில் உள்ள தேவி தியேட்டரில் ரசிகர்களின் FDFS கொண்டாட்டத்தில் விஜய்யும் பங்கேற்றுள்ளார்.

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய், விஜய் சேதுபதி, ஆண்ட்ரியா, சாந்தனு, அர்ஜுன் தாஸ் உள்ளிட்டோர் நடித்த மாஸ்டர் திரைப்படம் பொங்கல் விருந்தாக கடந்த 13ம் தேதி வெளியானது. தியேட்டர்களில் முதலில் 100 சதவீத இருக்கைக்கு அனுமதி அளித்த தமிழக அரசு, மத்திய அரசின் வலியுறுத்தலின் பேரில் மீண்டும் 50 சதவீத இருக்கைக்கு மட்டுமே அனுமதி என அறிவிப்பை வெளியிட்டது. 

இதனால் முதலில் விஜய் ரசிகர்கள், விநியோகஸ்தர்கள், தியேட்டர் உரிமையாளர்கள் முதலில் அதிர்ச்சி அடைந்தாலும், தற்போதைய நிலவரப்படி வசூல் மற்றும் விமர்சன ரீதியாக மாஸ்டர் திரைப்படம் அனைவரையும் மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. 50 சதவீத இருக்கைக்கு அனுமதி அளித்த தமிழக அரசு, பொங்கல் பண்டிகையை முன்னிட்டு சிறப்பு காட்சிகளுக்கு அனுமதி அளித்தது. 

 

இதையும் படிங்க: “சூப்பர் சிங்கர்” பிரபலத்துடன் காதலா?.... உண்மையை ஓபனாக போட்டுடைத்த குக் வித் கோமாளி ஷிவாங்கி...!

எனவே போகி பண்டிகை அன்று அதிகாலை 4 மணி முதலே தியேட்டர்கள் களைகட்ட ஆரம்பித்தது. கொரோனா லாக்டவுனுக்குப் பிறகு மாஸ் ஹீரோ படம் வெளியானதால் விஜய் ரசிகர்கள் மட்டுமின்றி பல்வேறு தரப்பினரும் தியேட்டர்களை தெறிக்கவிட்டனர். மாஸ்டர் படக்குழுவினரும் சென்னை ரோகிணி தியேட்டரில் ரசிகர்களுடன் சேர்ந்து முதல் நாள் முதல் காட்சியை கண்டு ரசித்தனர். 

 

இதையும் படிங்க: மகன், கணவருடன் சவுந்தர்யா ரஜினிகாந்த் பொங்கல் கொண்டாட்டம்... வைரலாகும் போட்டோஸ்...!

இயக்குநர் லோகேஷ் கனகராஜ், இசையமைப்பாளர் அனிருத், மாளவிகா மோகனன், சாந்தனு, அர்ஜுன் தாஸ் ஆகியோரின் தியேட்டர் விசிட் போட்டோஸ் சோசியல் மீடியாவில் வைரலானது. தற்போது தளபதி விஜய்யும் ரசிகர்களுடன் படம் பார்த்திப்பது தெரியவந்துள்ளது. அண்ணா சாலையில் உள்ள தேவி தியேட்டரில் ரசிகர்களின் FDFS கொண்டாட்டத்தில் விஜய்யும் பங்கேற்றுள்ளார். காலை 7 மணிக்கு எவ்வித ஆராவாரமும் இன்றி விஜய் படம் பார்த்ததற்கான தியேட்டர் சிசிடிவி காட்சிகள் தற்போது இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது. 

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories

நடமாடும் அரண்மனை! SRK-ன் பல கோடி ரூபாய் வேனிட்டி வேனுக்குள் இப்படியொரு வசதியா? மிரளவைக்கும் ரகசியம்!
மீண்டும் இணையும் மாஸ் கூட்டணி! 'அகண்டா 3' குறித்த அதிரடி அறிவிப்பு; கொண்டாட்டத்தில் பாலகிருஷ்ணா ரசிகர்கள்!