
தமிழ் சினிமாவில் சில படங்களில் மட்டுமே நடித்தாலும் காலம் முழுவதும் ரசிகர்கள் மனதில் நீங்காமல் இடம் பிடிக்கும் அதிர்ஷடம் சில நடிகைகளுக்கு மட்டுமே கிடைக்கும். அப்படி கோலிவுட்டையே தன்னுடைய அதிரடி கவர்ச்சியால் ஆட்டிவைத்து, மச்சான்ஸ் என்ற ஒற்றை வார்த்தையால் ரசிகர்களின் கட்டிப்போட்டு வைத்திருப்பவர் நடிகை நமீதா.
இதையும் படிங்க: “சூப்பர் சிங்கர்” பிரபலத்துடன் காதலா?.... உண்மையை ஓபனாக போட்டுடைத்த குக் வித் கோமாளி ஷிவாங்கி...!
இடையில் சற்றே வெயிட் கூடியதால் நமீதாவை திரையுலகம் பெரிதாக கண்டுகொள்ளவில்லை. இதையடுத்து திடீர் என்ட்ரியாக பிக்பாஸ் நிகழ்ச்சிக்குள் புகுந்து கலக்கினார். மீண்டும் ரசிகர்கள் மத்தியில் பரபரப்பாக பேசப்பட்ட நமீதா, பிக்பாஸ் வீட்டிலிருந்து வெளியே வந்த கையோடு தன்னுடன் மியாவ் படத்தில் நடித்தவரும் அந்த படத்தின் தயாரிப்பாளருமான வீராவை திருமணம் செய்து கொண்டார்.
இதையும் படிங்க: மகன், கணவருடன் சவுந்தர்யா ரஜினிகாந்த் பொங்கல் கொண்டாட்டம்... வைரலாகும் போட்டோஸ்...!
தற்போது பாஜகவில் தீவிரமாக பணியாற்றி வரும் நமீதா, சினிமாவிலும் தயாரிப்பாளராக தனது செகண்ட் இன்னிங்ஸை தொடங்கியுள்ளார். விரைவில் தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் தொடங்க உள்ள நிலையில், நமீதா பொங்கலை முன்னிட்டு வீட்டு வாசலில் அவர் கையாலேயே போட்ட கோலம் வைரலாகி வருகிறது. இதோ அந்த வீடியோ...
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.