
கடந்த ஜூன் 18ம் தேதி சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் போயஸ் கார்டன் இல்லத்தில் வெடிகுண்டு வைத்திருப்பதாக 108 ஆம்புலன்ஸ் எண்ணிற்கு அழைத்து மர்ம நபர் ஒருவர் மிரட்டல் விடுத்தார். இதையடுத்து காவல் கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் கொடுக்கப்பட, மோப்ப நாய் உதவியுடன் அதிகாரிகள் ரஜினி வீட்டை சோதனையிட்டனர். அதன் பின்னர் அந்த போன் கால் வதந்தி என கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து அந்த மர்ம நபர் கடலூர் மாவட்டம் நெல்லிக்குப்பத்தைச் சேர்ந்த 14 வயது சிறுவன் என்றும், அவர் மனநலம் பாதிக்கப்பட்டவர் என்றும் கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து சிறுவனின் பெற்றோரிடம் விசாரணை நடத்திய போலீசார், எச்சரித்து அனுப்பினர்.
இதையும் படிங்க: பாவாடை, தாவணியில் சும்மா நச்சுன்னு இருக்கும் லாஸ்லியா... வைரலாகும் இலங்கை பெண்ணின் மனதை மயக்கும் அழகு...!
இந்நிலையில் நேற்று நள்ளிரவில் தமிழக காவல்துறையின் கட்டுப்பாட்டு அறைக்கு மர்ம நபர் ஒருவர் போன் செய்து, சாலிகிராமத்தில் உள்ள விஜய் வீட்டிற்கு வெடிகுண்டு வைத்திருப்பதாக கூறி விட்டு, இணைப்பை துண்டித்துள்ளார். உடனடியாக மோப்ப நாயுடன் சம்பவ இடத்திற்கு விரைந்த வெடிகுண்டு நிபுணர்கள் மற்றும் போலீசார் சாலிகிராமத்தில் உள்ள விஜய் வீட்டை சல்லடை போட்டு சோதனை நடத்தியுள்ளனர். ஆனால் அங்கு வெடிகுண்டு எதுவும் சிக்கவில்லை. அதன் பின்னர் அந்த போன் கால் வதந்தி என்பது கண்டறியப்பட்டது.
இதையும் படிங்க: வனிதா - பீட்டர் பால் அடுத்த முத்த லீலை... செய்யுறதை எல்லாம் செஞ்சிட்டு விளக்கம் வேற....!
வெடிகுண்டு நிபுணர்கள் அந்த போன் நெம்பரை சைபர் கிரைமில் கொடுத்து சோதனை நடத்தியுள்ளனர். அந்த எண் விழுப்புரத்தைச் சேர்ந்தது என்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து விழுப்புரம் போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டு, அவர்கள் விசாரணையை தொடங்கியுள்ளனர். வெடிகுண்டு மிரட்டல் விடுத்த மர்ம நபர், மரக்காணத்தைச் சேர்ந்த புவனேஷ் என்பது கண்டுபிடிக்கப்பட்டது. ஆனால் அந்த நபர் மனநலம் பாதிக்கப்பட்டவர் என்பது தெரியவந்துள்ளது. இதையடுத்து போலீசார் புவனேஷின் பெற்றோரிடம் விசாரணை நடத்தியுள்ளனர்.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.