ரஜினிக்கு மட்டும்தான் விருதா…? கமல்ஹாசன், பாரதிராஜா, இளையராஜாவுக்கும் பால்கே விருது வேனும – வைரமுத்து அதிரடி!

By manimegalai aFirst Published Oct 27, 2021, 9:05 AM IST
Highlights

தாதா சாஹேப் பால்கே விருதுபெற்ற நண்பர் ரஜினிகாந்த் கலை உலகிற்கு பெருமை சேர்த்துள்ளார் என்று கவிஞர் வைரமுத்து புகழாரம் சூட்டியுள்ளார்.

தாதா சாஹேப் பால்கே விருதுபெற்ற நண்பர் ரஜினிகாந்த் கலை உலகிற்கு பெருமை சேர்த்துள்ளார் என்று கவிஞர் வைரமுத்து புகழாரம் சூட்டியுள்ளார்.

இந்திய திரையுலகின் மிகவும் உயரிய விருதான தாதா சாஹேப் பால்கே விருது சட்டமன்ற தேர்தல் நடைபெறவிருந்த சில மாதங்களுக்கு முன்னர் அறிவிக்கப்பட்டது. 2019-ம் ஆண்டில் வெளியான படங்களுக்கான தேசிய விருதுகளும் அப்போது அறிவிக்கப்பட்டது. ரஜினிகாந்த் புதிய கட்சித் தொடங்குவார் என்று பரபரப்பாக பேசப்பட்ட காலக்கட்டத்தில் அவருக்கு மத்திய அரசு தாதா சாஹேப் பால்கே விருதை அறிவித்தது. இதில் அரசியல் உள்நோக்கம் இருப்பதாகவும் அப்போது பேசப்பட்டது.

இந்தநிலையில் அரசியல் கட்சி தொடங்கும் முடிவை கைவிட்ட ரஜினிகாந்த் இரு தினங்களுக்கு முன்னர் டெல்லியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் தாதா சாஹேப் பால்கே விருதை பெற்ற கையோடு ஜனாதிபதியையும் சந்தித்து வாழ்த்து பெற்றார். தாதா சாஹேப் விருது பெற்ற ரஜினிகாந்திற்கு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், ஆளுநர் ஆர்.என்.ரவி, என அரசியல் பிரபலங்கள் முதல் சச்சின் தெண்டுல்கர் உள்ளிட்ட விளையாட்டு வீரர்களும் வாழ்த்து மழை பொழிந்து வருகின்றனர்.

ரஜினிக்கு விருது வழங்கப்பட்டதில் தமிழ் திரையுலகிலேயே சிலருக்கு புகைச்சல் இருப்பதாகக் கூறப்பட்டது. அதன் காரணமாகவே பெரும்பாலான நட்சத்திரங்கள் ரஜினிக்கு வாழ்த்து கூறவில்லை என்றும் பேசப்பட்டது. அதிலும் சினிமா ரசிகர்கள் பலரும் குழந்தை நட்சத்திரத்தில் இருந்து தற்போது வரை திரைத்துறையில் பல்வேறு சாதனைகளை படைத்த கமலுக்கே பால்கே விருது வழங்கியிருக்க வேண்டும் என்று விமர்சித்து வருகின்றனர்.

இந்தநிலையில் விருது பெற்ற ரஜினிக்கு இரண்டு நாட்களாக வாழ்த்து கூறாமல் இருந்துவந்த கவிஞர் வைரமுத்து, தற்போது வாழ்த்துச் செய்தியுடன் கமலுக்கான கோரிக்கையையும் முன்வைத்திருக்கிறார். இது தொடர்பாக டிவிட்டரில் பதிவிட்டுள்ள வைரமுத்து., பால்கே விருது பெற்றதில் கலை உலகுக்கே பெருமை சேர்த்துள்ளார் நண்பர் ரஜினிகாந்த். ஊர்கூடி வாழ்த்துவோம் என்று குறிப்பிட்டுள்ளார். மேலும், கமல்ஹாசன் - பாரதிராஜா - இளையராஜா என்று பால்கே விருதுக்குத் தகுதிமிக்க பெருங்கலைஞர்கள் தமிழ்நாட்டில் மேலும் திகழ்கிறார்கள் என்பதையும் ஒன்றிய அரசின் கண்களுக்குக் காட்டுவோம். என்றும் கவிஞர் வைரமுத்து பதிவிட்டிருக்கிறார்.

 

இளையராஜா உடன் பேச்சுவார்த்தையை நிறுத்தியிருந்தாலும், அவருக்கும் விருதுகொடுக்க வேண்டும் என்று வைரமுத்து கோரிக்கை வைத்திருப்பதையும் ரசிகர்கள் பாராட்டியுள்ளனர்.

click me!