பிறந்தநாளில் இப்படியா செய்வார்கள்…! பிணக்குவியல்களுக்கு நடுவே அமர்ந்து அமலா பால் சாப்பிடும் புகைப்படம் வைரல்..

Published : Oct 26, 2021, 08:13 PM IST
பிறந்தநாளில் இப்படியா செய்வார்கள்…! பிணக்குவியல்களுக்கு நடுவே அமர்ந்து அமலா பால் சாப்பிடும் புகைப்படம் வைரல்..

சுருக்கம்

முதல் படமான சிந்து சமவெளியில் தொடங்கி கடைசியாக வெளிவந்த ஆடை திரைப்படம் வரை கனமான பாத்திரங்களை ஏற்று நடித்துள்ள அமலா பால், புதிய படத்திலும் மற்றொரு அவதாரம் எடுத்திருக்கிறார்.

முதல் படமான சிந்து சமவெளியில் தொடங்கி கடைசியாக வெளிவந்த ஆடை திரைப்படம் வரை கனமான பாத்திரங்களை ஏற்று நடித்துள்ள அமலா பால், புதிய படத்திலும் மற்றொரு அவதாரம் எடுத்திருக்கிறார்.

தமிழில் முன்னணி நடிகைகளில் ஒருவரான அமலா பால் இன்று தமது பிறந்தநாளை கொண்டாடி வருகிறார். கடைசியாக அவரது நடிப்பில் வெளியான ஆடை திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்ற நிலையில் அவரது அடுத்த திரைப்படம் குறித்து ரசிகர்கள் எதிர்பார்த்து காத்திருந்தனர். அவர்களது பசிக்கு தீனிபோடும் விதமாக அமலாபாலின் பிறந்த தினத்தில் புதிய திரைப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகியிருக்கிறது.

ஆடை படத்திற்குப் பின்னர் இடைவெளி விட்ட அமலாபால், அனூப் எஸ் பானிக்கர் இயக்கத்தில் காடவர் என்ற படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தை அமாலா பாலின் தயாரிப்பு நிறுவனமே தயாரித்து வெளியிடுகிறது. கதாநாயகிக்கு முக்கியத்துவம் அளிக்கும் இப்படத்தில் அமலா பால் ஒரு போரன்ஸிக் சர்ஜனாக நடித்திருக்கிறார்.

போரன்ஸிக் சர்ஜனாக நடிப்பதற்கு ஒரு மருத்துவமனையில் ஒரு வாரம் அமலாபால் பயிற்சி எடுத்ததாகவும், பிரத்யேகமாக ஒரு சில மருத்துவர்களிடம் பயிற்சி பெற்று படத்தில் நடித்திருப்பதாகவும் கூறப்படுகிறது. அமலாபால் பிறந்தநாளையொட்டி காடவர் படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியிடப்பட்டுள்ளது.

பிணங்களுக்கு நடுவே அமர்ந்தபடி, அமலாபால் உணவு சாப்பிடும் புகைப்படம் பார்ப்பதற்கே திகிலாக உள்ளது. க்ரைம் திரில்லர் படத்தில் அமலாபாலின் முதல் தோற்றமே எதிர்பார்ப்புகளை அதிகரித்துள்ளது.

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

Read more Articles on
click me!

Recommended Stories

திமிராக நடுவிரலை தூக்கிக் காட்டிய ஷாருக்கான் மகன் ஆர்யன் கான்... போலீஸுக்கு பறந்த புகார்
மலேசியாவில் அஜித்தை ரவுண்டு கட்டிய ரசிகர்கள்... கூட்டத்தின் நடுவே கூலாக AK செய்த சம்பவத்தை பாருங்க..!