பிறந்தநாளில் நடிகை அமலா பால் எடுத்த தைரியமான முடிவு… குவியும் வாழ்த்துகள்!

Published : Oct 26, 2021, 06:25 PM IST
பிறந்தநாளில் நடிகை அமலா பால் எடுத்த தைரியமான முடிவு… குவியும் வாழ்த்துகள்!

சுருக்கம்

தமிழில் அறிமுகமான முதல் படத்திலேயே மாமனாரை காதலிக்கும் துணிச்சலான வேடத்தில் நடித்தவர், கடைசியாக வெளியான ஆடை திரைப்படத்தில் ஒட்டுத்துணி கூட இல்லாமல் நடித்து பலரது பாராட்டையும் பெற்றார்.

தமிழில் அறிமுகமான முதல் படத்திலேயே மாமனாரை காதலிக்கும் துணிச்சலான வேடத்தில் நடித்தவர், கடைசியாக வெளியான ஆடை திரைப்படத்தில் ஒட்டுத்துணி கூட இல்லாமல் நடித்து பலரது பாராட்டையும் பெற்றார்.

தமிழ் திரையுலகின் தனக்கென ஒரு இடத்தை பிடித்த நடிகை அமலா பால் இன்று தமது பிறந்தநாளை கொண்டாடி வருகிறார். அவருக்கு நடிகர், நடிகைகள், இயக்குனர்கள், தயாரிப்பாளர்கள், ரசிகர்கள் சமூக வலைதளங்களில் வாழ்த்து மழை பொழிந்துவருகின்றனர். வாழ்த்து தெரிவித்த அனைவருக்கும் அமலா பால் நன்றி கூறியுள்ளார்.

தமிழ் சினிமாவுக்கு சிந்து சமவெளி என்ற படம் மூலம் அறிமுகமான அமலா பால், முதல் படத்திலேயே மாமனாரை காதலிக்கும் மருமகள் என்ற கனமான பாத்திரத்தை ஏற்று நடித்திருந்தார். அடுத்த படமான மைனா பெரும் வெற்றி பெற, அடுத்தடுத்து சித்தார்த், ஆர்யா, ஜெயம் ரவி என சாக்லேட் பாய் நடிகர்களுடன் நடித்து அமலாபால் தனக்கான இடத்தை பிடித்தார்.

கடின உழைப்பை மட்டுமே மூலதனமாகக் கொண்டு திரைத்துறையில் எதிர்நீச்சல் போட்ட அமலா பால் விஜய், தனுஷ் உள்ளிட்ட முன்னணி நடிகர்கள் உடனும் இணைந்து நடித்து முத்திரை பதித்தார். இதற்கிடையிலான காலக் கட்டத்தில் இயக்குனர் விஜய் உடன் காதலில் விழுந்த அமலா பால், அவரை இருவிட்டார் சம்மதத்தோடு திருமணம் செய்துகொண்டார்.

மனவாழ்க்கை சில வருடங்களில் கசக்கவே விவாகரத்து பெற்ற அமலா பால் தொடர்ந்து திரைப்படங்களில் நடித்து வருகிறார். இவருக்கு ரகசிய திருமணம் நடந்துவிட்டதாகவும் அவ்வப்போது கிசுகிசுக்கள் பரவும். அமலா பால் கடைசியாக வெளிவந்த படம் ஆடை. அதிலும் உடம்பில் ஒரு துணி கூட இல்லாமல் நடித்து தமது துணிச்சலனை வெளிப்படுத்தியிருந்தார்.

இந்தநிலையில் பிறந்தநாளில் நடிகை அமலாபால் புதிய அத்தியாயத்தை தொட்ங்கியிருக்கிறார். கடின உழைப்பால் சம்பாதித்த பணத்தை, திரைத்துறையிலேயே முதலீடு செய்ய விரும்பிய அமலாபால் தனியாக தயாரிப்பு நிறுவனத்தை தொடங்கியிருக்கிறார். அமலா பால் நடித்துள்ள படத்தை அவரது சொந்த நிறுவனமே தயாரித்து வருகிறது. தயாரிப்பு நிறுவனம் தொடங்கியுள்ள அமலா பாலுக்கு திரைத் துறையினர், ரசிகர்கள் வாழ்த்து கூறி வருகின்றனர்.

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

Read more Articles on
click me!

Recommended Stories

திமிராக நடுவிரலை தூக்கிக் காட்டிய ஷாருக்கான் மகன் ஆர்யன் கான்... போலீஸுக்கு பறந்த புகார்
மலேசியாவில் அஜித்தை ரவுண்டு கட்டிய ரசிகர்கள்... கூட்டத்தின் நடுவே கூலாக AK செய்த சம்பவத்தை பாருங்க..!