விக்ரம் படத்தில் கமலுடன் கைகோர்க்கும் பிரபல நடிகர்…! ரசிகர்கள் ஆச்சர்யம்

Published : Oct 26, 2021, 03:51 PM IST
விக்ரம் படத்தில் கமலுடன் கைகோர்க்கும் பிரபல நடிகர்…! ரசிகர்கள் ஆச்சர்யம்

சுருக்கம்

கலைஞானி கமல்ஹாசனின் விக்ரம் படத்தில் பிரபல மல்லுவுட் நடிகர் செம்பன் வினோத் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளார்.

கலைஞானி கமல்ஹாசனின் விக்ரம் படத்தில் பிரபல மல்லுவுட் நடிகர் செம்பன் வினோத் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளார்.

அரசியல் ஒரு பக்கம் இருந்தாலும் தொடர்ந்து தமது சினிமா பயணத்தில் இன்னமும் கமல்ஹாசன் பயணித்து கொண்டு தான் இருக்கிறார். குறிப்பாக அவரின் விக்ரம் படம் பற்றிய எதிர்பார்ப்பு பல மடங்கு உள்ளது.

இந்த படத்தில் கமலுடன் ஏற்கனவே விஜய் சேதுபதி கைகோர்த்திருப்பது தெரிந்த விஷயம். அதற்கான பல கோடியில் சம்பளம் விஜய் சேதுபதிக்கு நிர்ணயிக்கப்பட்டதாக கூட சொல்லப்படுகிறது. பகத்பாசிலும் இந்த படத்தில் கமலுடன் இணைந்து உள்ளார்.

கமலுடன் இணைந்து நடிப்பதில் பலரும் தயங்குவதாக சினிமா வட்டாரத்தில் ஒரு பேச்சு இப்பவும் உண்டு. காரணம் கமலின் ராசி என்று கூறப்படுகிறது. அதாவது கமலுடன் இணைந்து அவருக்கு இணையான கதாபாத்திரத்தில் நடிப்பவர்கள் ராசி வேறு மாதிரியாகி விடும் என்று கூறுபவர்களும் உண்டு.

வெற்றி விழாவில் பிரபு, குருதிப்புனல் படத்தில் அர்ஜூன், அன்பே சிவம் படத்தில் மாதவன் ஆகியோரின் கேரியர் கமலுடன் நடித்த பின்னர் தலைகீழானதாக கோலிவுட்டில் அப்போது தகவல்கள் கசிந்தன.

இந் நிலையில் விறுவிறுப்புடன் படப்பிடிப்பு நடத்தப்பட்டு வரும் விக்ரம் படம் பற்றிய ஒரு முக்கிய தகவல் வெளியாகி உள்ளது. அதாவது அந்த படத்தில் பிரபல மலையாள நடிகர் செம்பன் வினோத் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளாராம். இவர் ஏற்கனவே கோலிசோடா 2ம் பாகத்தில் நடித்தவர். படத்தின் லேட்டஸ்ட் தகவல்கள் வந்து கொண்டே இருப்பது ரசிகர்களை குஷியாக்கி இருக்கிறது.

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

Read more Articles on
click me!

Recommended Stories

திமிராக நடுவிரலை தூக்கிக் காட்டிய ஷாருக்கான் மகன் ஆர்யன் கான்... போலீஸுக்கு பறந்த புகார்
மலேசியாவில் அஜித்தை ரவுண்டு கட்டிய ரசிகர்கள்... கூட்டத்தின் நடுவே கூலாக AK செய்த சம்பவத்தை பாருங்க..!