வா தலைவா…. ரஜினி ரசிகர்களுக்கு தீபாவளி தொடங்கியது… அரங்கம் அதிர நாளை வெளியாகிறது அண்ணாத்த டிரெய்லர்.!

Published : Oct 26, 2021, 06:48 PM IST
வா தலைவா…. ரஜினி ரசிகர்களுக்கு தீபாவளி தொடங்கியது… அரங்கம் அதிர நாளை வெளியாகிறது அண்ணாத்த டிரெய்லர்.!

சுருக்கம்

அண்ணாத்த திரைப்படத்தில் மோசன் போஸ்டர், டீசர், முதல் நான்கு பாடல்கள் ஏற்கெனவே வெளியாகி ரசிகர்களிடம் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.

அண்ணாத்த திரைப்படத்தில் மோசன் போஸ்டர், டீசர், முதல் நான்கு பாடல்கள் ஏற்கெனவே வெளியாகி ரசிகர்களிடம் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.

சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் சிறுத்தை சிவா இயக்கத்தில் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் நடித்திருக்கும் படம் அண்ணாத்த. தீபாவளி விருந்தாக படம் திரைக்கு வருவதாக அறிவிக்கப்பட்டதுமே ரஜினி ரசிகர்கள் கொண்டாட்டங்களை தொடங்கிவிட்டனர். சன் பிக்சர்ஸ் தயாரிப்பு என்பதால் ஏராளமான திரையரங்குகளில் அண்ணாத்த திரைபடம் தான் வெளியாகும் என்று கூறப்படுகிறது. இதனால் தீபாவளிக்கு வெளியாகவிருந்த சிம்பு நடித்துள்ள மாநாடு போட்டியில் இருந்து விலகிவிட்டது. அதேபோல், விஷால், ஆர்யா நடித்துள்ள எனிமி திரைப்படமும் தள்ளிப்போகலாம் என்று கூறப்படுகிறது.

அரசியல் கட்சி தொடங்கும் முடிவை கைவிட்ட பின்னர் ரஜினிகாந்த் நடித்துள்ள குடும்ப திரைப்படம் என்பதால் அண்ணாத்த அனைத்து தரப்பு மக்களிடமும் எதிர்பார்ப்புகளை அதிகரித்துள்ளது. பண்டிகை நாளில் குடும்பத்துடன் சென்று பார்க்க சிறந்த படமாக இருக்கும் என்று ரசிகர்கள் நம்புகின்றனர். அதற்கு ஏற்றார்போல் அண்ணாத்த படத்தின் மோசன் போஸ்டர் வெளியானபோதே நல்ல வரவேற்பு இருந்தது.

அண்ணாத்த படத்தின் டீசர், மற்றும் முதல் நான்கு பாடல்கள் ரசிகர்களிடம் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. பாடல்களின் லிரிக்கல் வீடியோக்கள், டீசர் என அனைத்தும் மில்லியன் கணக்கில் பார்வையாளர்களை குவித்துள்ளது. ரஜினி உடன், நயன்தாரா, குஷ்பு, மீனா, கீர்த்தி சுரேஷ் என பெரும் பட்டாளமே நடித்துள்ளதால் அண்ணாத்த மீதான ஈர்ப்பு அதிகரித்துள்ளது.

கொரோனா காலம் என்பதால் இசை வெளியீட்டு விழா இருக்காது என்று ஏற்கெனவே தங்களை தேற்றிக்கொண்ட ரசிகர்கள், அண்ணாத்த படத்தின் டிரெய்லரை எதிர்பார்த்து கத்திருந்தனர். அவர்களுக்கு தீபாவளி போனஸாக நாளை மாலை ஆறு மணிக்கு அண்ணாத்த டிரெய்லர் வெளியாகும் என்று சன் பிக்சர்ஸ் நிறுவனம் அறிவித்துள்ளது. இந்த அறிவிப்பை ரசிகர்கள் தற்போதே சமூக வலைதளங்களில் கொண்டாடத் தொடங்கிவிட்டனர்.

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

Read more Articles on
click me!

Recommended Stories

யார் இந்த அதிரே அபி? மெகா ஸ்டார் பிரபாஸுடன் இவருக்கு இவ்வளவு நெருக்கமா? வைரலாகும் பின்னணி!
15 வருடங்களாக நாகார்ஜுனாவை வாட்டும் நோய்! ஏன் இன்னும் குணமாகவில்லை? கவலையில் ரசிகர்கள்!