அஜீத்துக்கு எவ்வளவு பெரிய துரோகம் செய்கிறார் தெரியுமா ‘விஸ்வாசம்’ தயாரிப்பாளர்?

By vinoth kumarFirst Published Dec 13, 2018, 3:45 PM IST
Highlights

பொங்கல் 14ந் தேதி திங்கட்கிழமை கொண்டாடப்பட உள்ளது. அன்றைய தினம் ரஜினியின் பேட்ட வெளியாவது உறுதியாகிவிட்டது. அதே சமயம் ஜனவரி 10ந் தேதி வியாழனன்று அதாவது பொங்கலுக்கு 4 நாட்கள் முன்னதாக விஸ்வாசத்தை வெளியிட சத்யஜோதி பிலிம்ஸ் ஒப்புக் கொண்டுள்ளது.

இனியும் வீண் வதந்திகளுக்கு இடம் கொடுக்கவேண்டாம் என்ற எண்ணத்தில் ‘பேட்ட’ மற்றும் ‘விஸ்வாசம்’ தொடர்பான ரிலீஸ் தேதிகளில் ஒரு இறுதிக்கட்ட புரிதலுக்கு வந்திருக்கிறார்கள் இரு படத்தயாரிப்பாளர்களும். முடிவில் மீசையில் மண் ஒட்டாமல் சரண்டர் ஆகியிருப்பவர் ‘விஸ்வாசம்’ படத்தயாரிப்பாளர் சத்யஜோதி பிலிம்ஸ் தியாகராஜன்தான்.

இரு படங்களும் பொங்கலுக்கே எனப் பிடிவாதமாக இருந்த நிலையில், திரையரங்குகளை பொறுத்தவரை விஸ்வாசத்தை விட பேட்ட படத்தை வெளியிடவே உரிமையாளர்கள் ஆர்வம் காட்டி வருகின்றனர். மேலும் விஸ்வாசம் படத்தை தயாரித்துள்ள சத்யஜோதி பிலிம்சை விட பேட்ட படத்தை தாயரித்துள்ள சன் பிக்சர்ஸ் வசம் அதிக திரையரங்குகள் உள்ளன. மேலும் சன் டிவி என்கிற மிகப்பெரிய பேனரும் இருப்பதால் சன் பிக்சர்சை பகைத்துக் கொண்டு சத்யஜோதி பிலிம்சின் விஸ்வாசம் படத்தை வெளியிட முன்னணி திரையரங்குகள் தயாராக இல்லை.

இந்த நிலையில் தான் விஸ்வாசம் படத்தின் சேட்டிலைட் உரிமையை சன் பிக்சர்ஸ் நிறுவனம் சன் டிவிக்காக வாங்கியுள்ளது. இதனை தொடர்ந்து நடைபெற்ற பேச்சுவார்த்தையின் முடிவில் விஸ்வாசம் படம் பொங்கல் ரேசில் இருந்து விலக முன்வந்துள்ளது. பொங்கல் 14ந் தேதி திங்கட்கிழமை கொண்டாடப்பட உள்ளது. அன்றைய தினம் ரஜினியின் பேட்ட வெளியாவது உறுதியாகிவிட்டது. அதே சமயம் ஜனவரி 10ந் தேதி வியாழனன்று அதாவது பொங்கலுக்கு 4 நாட்கள் முன்னதாக விஸ்வாசத்தை வெளியிட சத்யஜோதி பிலிம்ஸ் ஒப்புக் கொண்டுள்ளது.

இதன்படி ‘விஸ்வாசம்’பத்தாம் தேதியன்று தன் இஷ்டப்படி 700 முதல் 800 தியேட்டர்கள் வரை ரிலீஸாகலாம். ஆனால் படம் ஹிட்டோ ஃப்ளாப்போ சரியாக 14ம் தேதியன்று ‘பேட்ட’ விரும்பும் அவ்வளவு தியேட்டர்களையும் விட்டுக்கொடுத்துவிட வேண்டும். 

10 முதல் 13ந் தேதி வரையிலான 4 நாட்களுக்கு முன்னணி திரையரங்குகள் கிடைத்தால் போதும் வசூலை அள்ளிவிடலாம் அதன் பிறகு பொங்கல் விடுமுறை சமயத்தில் ஓரளவு திரையரங்குகள் கிடைத்தாலே போதும் படம் நல்ல வசூலை குவிக்கும் என்று சத்யஜோதி பிலிம்ஸ் தியாகராஜன் நம்புகிறார். ஆனால் அஜீத் இதை சுத்தமாக விரும்பவில்லையாம். ரிலீஸான நான்காவது நாளே தனது படம் நூற்றுக்கணக்கான தியேட்டர்களிலிருந்து தூக்கப்படுவதை பெருத்த அவமானமாகக் கருதுகிறாராம் அஜீத்.

click me!