’காஸ்டிங் டைரக்டர்’ என்ற போர்வையில் 200 பெண்களின் வாழ்க்கையைச் சூறையாடிய காமுகன்...

Published : Dec 13, 2018, 02:19 PM IST
’காஸ்டிங் டைரக்டர்’ என்ற போர்வையில் 200 பெண்களின் வாழ்க்கையைச் சூறையாடிய காமுகன்...

சுருக்கம்

மோகனால் பாதிக்கப்பட்ட இளம்பெண் ஒருவர், மோகன் படுக்கை அறையில் அவருக்கு தெரியாமல் மைக்ரோ கேமராவை ரகசியமாக அமைத்து கடந்த 3 மாதங்களாக நடந்த சம்பவங்களை படம் பிடித்துள்ளார்.   


தமிழ் சினிமாவில் ‘காஸ்டிங் டைரக்டர்’என்ற மிகப்பெரிய போஸ்டிங்கில் இருப்பதாகக் கூறிக்கொண்டு பல பெண்களை நிர்வாணப்படும் எடுத்து பாலியல் தொல்லைகளும் கொடுத்ததாக மோகன் என்பவர் மீது கமிஷனர் அலுவலகத்தில் புகார் செய்யப்பட்டுள்ளது.

சென்னை அடையார் சாஸ்திரி நகர் 2வது கிராஸ் தெருவை சேர்ந்தவர் மோகன் (37). சினிமா துறையில் காஸ்டிங் டைரக்டராக உள்ளதாக சொல்லிக்கொள்கிறார். மேலும் இவர் தனது வீட்டின் முதல் மாடியில் மாடலிங் ஏஜென்சி ஒன்று நடத்தி வருகிறார். அந்த ஏஜென்சியில் 200க்கும் மேற்பட்ட இளம்பெண்கள் உறுப்பினர்களாக உள்ளனர். ஏஜென்சியின் நடவடிக்கைகள் குறித்து தகவல் பரிமாறும் வகையில் மோகன் வாட்ஸ்அப் குழு ஒன்று தொடங்கி அதில் அனைத்து இளம் பெண்களையும் சேர்த்துள்ளார். சில பெண்களை தேர்வு செய்து தனியாக அழைத்து இளம்பெண்களுடன் உல்லாசமாக இருந்துள்ளார். இதுபோல் 50க்கும் மேற்பட்ட இளம்பெண்களை மாடலிங் வாய்ப்பு தருவதாக கூறி தனியாக அழைத்து சென்று மதுபானம் கொடுத்து தனது ஆசையை தீர்த்து வந்துள்ளார். மோகனால் பாதிக்கப்பட்ட இளம்பெண் ஒருவர், மோகன் படுக்கை அறையில் அவருக்கு தெரியாமல் மைக்ரோ கேமராவை ரகசியமாக அமைத்து கடந்த 3 மாதங்களாக நடந்த சம்பவங்களை படம் பிடித்துள்ளார். 

அப்படி எடுக்கப்பட்ட 50க்கும் மேற்பட்ட ஆபாச வீடியோக்களை சம்பந்தப்பட்ட இளம்பெண், மோகன் நடத்தும் மாடலிங் ஏஜென்சி வாட்ஸ் அப் குழுவில் பதிவேற்றம் செய்து அனைவரையும் அதிர்ச்சியடைய செய்தார். இந்த சம்பவம் சென்னையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதை தொடர்ந்து காஸ்டிங் டைரக்டர் மோகன் மாடலிங் பெண்களுடன்  நிர்வாணமாக இருக்கும் புகைப்படம் மற்றும் 30க்கும் மேற்பட்ட வீடியோக்கள் வெளியாகியது. ஆனால் இந்த சம்பவத்தால் பாதிக்கப்பட்ட பெண்கள் யாரும் காஸ்டிங் டைரக்டர் மோகன் மீது தைரியமாக புகார் கொடுக்க முன்வரவில்லை. ஏன் என்றால்  மோகன் சினிமா மற்றும் பெரிய விளம்பர நிறுவனங்களில் வாய்ப்பு வாங்கி தருவதாக அவரது மாடலிங் ஏஜென்சியில் உள்ள 200 பெண்களின் நிர்வாண புகைப்படங்கள் அவரிடம் உள்ளது. இதனாலேயே அவர் மீது பாதிக்கப்பட்ட பெண்கள் புகார் கொடுக்காமல் தயங்கி வந்தனர்.

இந்நிலையில், சினிமா காஸ்டிங் டைரக்டர் மோகனால் பாதிக்கப்பட்ட சென்னை அடையாரை சேர்ந்த ஹாசினி (21), முகப்பேரை சேர்ந்த காயத்ரி (20) ஆகிய 2 இளம் பெண்களும் ேநற்று  போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் உரிய ஆதாரங்களுடன் தனித்தனியாக புகார் அளித்தனர்.  இரண்டு பெண்கள் அளித்த புகாரை தொடர்ந்து ஓரிரு நாளில் காஸ்டிங் டைரக்டர் மோகனால் பாதிக்கப்பட்ட 50 பெண்களில் 10 பெண்கள் புகார் அளிக்க உள்ளதாகவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.

மாடலிங் பெண் ஹாசினி புகாரில் கூறியிருப்பதாவது: நான் எம்.காம் படித்துவிட்டு கடந்த 2 வருடங்களாக அடையாரில் தங்கி தனியார் நிறுவனம் ஒன்றில் பணிபுரிந்து வருகிறேன். சினிமா துறையில் உள்ள “காஸ்டிங் டைரக்டர்” மோகன் என்னை சமூக வலைதளங்கள் மூலம் தொடர்பு கொண்டு சினிமா துறையில் வேலை வாங்கி தருவதாக அழைத்தார். அதன்படி நான் நேரில் சென்றபோது வாய்ப்பு வாங்கி தருவதாக பலமுறை அலைக்கழித்தார். பின்னர், அவர் என்னுடைய நிர்வாண புகைப்படங்களை அனுப்பினால்தான் நான் உனக்கு வேலை வாங்கி கொடுப்பேன் என்று கூறினார். நான் அதற்கு மறுத்தேன். பின்னர் வேறு வழியின்றி என் நிர்வாண புகைப்படங்களை அனுப்பும் சூழ்நிலை எனக்கு ஏற்பட்டது. 

இந்த விஷயம் இத்துடன் நில்லாமல், அவர் என்னை பாலியல் ரீதியாகவும் தொல்லை கொடுக்க ஆரம்பித்துவிட்டார். அவர் என்னை தன்னுடன் நெருக்கமாக இருக்குமாறு கட்டாயப்படுத்தவும் செய்தார்.இதற்கிடையே, காஸ்டிங் மோகனின் அந்தரங்க வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வெளியானதை பார்த்து அதிர்ந்து போனேன். எங்கே எனது புகைப்படங்களும் சமூக வலைதளங்களில் பரப்பி விடுவாரோ என்ற பயத்தினால் இந்த புகாரை அளிக்கிறேன். வேறு சில ஆதாரங்களின் மூலமாக, அவர் பெண்களின் அந்தரங்க புகைப்படங்களை வெளிநாட்டில் தனது ஆட்களிடம் பணத்திற்கு விற்பதாக கேள்விப்பட்டேன். 

அதனை தடுக்கும் விதமாக அவருடைய கைப்பேசி, மடி கணினி, வங்கி கணக்கு  போன்றவற்றை சோதனைக்கு உட்படுத்தினால் பல தகவல்கள் வெளிவரும் என்று உறுதியாக நம்புகிறேன். அவர் எனக்கு அளித்த பாலியல் துன்புறுத்தல் காரணமாக நான் மனரீதியாக மிகவும் பாதிக்கப்பட்டுள்ளேன். எனவே, காஸ்டிங் டைரக்டர் மோகனுக்கு கடுமையான தண்டனை அளிக்குமாறு தாழ்மையுடன் கேட்டுக் கொள்கிறேன். இவ்வாறு அந்த மனுவில் தெரிவித்துள்ளார்.

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories

உயிர் போய் உயிர் வந்துருக்கு!" - பயங்கர கார் விபத்தில் சிக்கிய ரஜினி பட நடிகை நோரா ஃபதேஹி!
ஜவ்வா இழுக்கும் இயக்குநர்; ரொம்பவே ஒர்ஸ்ட்; சிறகடிக்க ஆசை சீரியலை கழுவி ஊற்றும் நெட்டிசன்கள்!