கார் விபத்து மூலம் புல்லட் இளைஞரைப் போட்டுத் தள்ளிய விக்ரம் ஹீரோயின்...

Published : Dec 13, 2018, 01:35 PM IST
கார் விபத்து மூலம் புல்லட் இளைஞரைப் போட்டுத் தள்ளிய விக்ரம் ஹீரோயின்...

சுருக்கம்

கடற்கரை சாலையில் சென்று கொண்டிருந்த போது ஜரீன் கான் காரும் – மோட்டார் சைக்கிள் ஒன்றும் மோதி விபத்துக்குள்ளானது. இதில் தூக்கி வீசப்பட்ட மோட்டார் சைக்கிள் நபர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். 

கவர்ச்சி நடிகை ஜரீன் கானின் கார் மோதி மோட்டார் சைக்கிளில் சென்ற ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். விபத்தின்போது நடிகையும் டிரைவரும் போதையில் இருந்தார்களா என்ற கோணத்தில் விசாரணை நடந்து வருகிறது.

சல்மான் கானின் ’வீர்’ என்ற படத்தின் மூலம் அறிமுகம் ஆனவர் நடிகை ஜரீன் கான். இவர் நடித்த ’ஹேட் ஸ்டோரி’’ஹவுஸ்ஃபுல்2’  எனும் படங்கள்  மிகப்பெரிய வெற்றி பெற்றன. இந்த படங்களின் மூலம் இந்தி ரசிகர்களின் கனவுக்கன்னியாக ஜரீன் கான் வலம் வருகிறார்.

தமிழில் சில வருடங்களுக்கு முன்பு துவங்கப்பட்ட விக்ரமின் ‘கரிகாலன்’ படத்தின் ஹீரோயினாகவும் கமிட் ஆகியிருந்தார் ஜரீன். ஆனால் இந்த படம் பல்வேறு காரணங்களால் முடங்கியுள்ளது. 

இந்த நிலையில் படப்பிடிப்பில் பங்கேற்பதற்காக நடிகை ஜரீன் கான் கோவா சென்றுள்ளார். அங்கு காரை டிரைவர் ஓட்ட, பின்னால் அமர்ந்து ஜரீன் கான் சென்று கொண்டிருந்தார். கடற்கரை சாலையில் சென்று கொண்டிருந்த போது ஜரீன் கான் காரும் – மோட்டார் சைக்கிள் ஒன்றும் மோதி விபத்துக்குள்ளானது. இதில் தூக்கி வீசப்பட்ட மோட்டார் சைக்கிள் நபர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இதனை அடுத்து காரை ஓட்டிய அப்பாஸ் மற்றும் காரில் இருந்த நடிகை ஜரீன் கான் ஆகியோரை போலீசார் காவல் நிலையம் அழைத்துச் சென்றனர்.

விசாரணையில் ஜரீன் கான் கார் மீது பின்னால் வந்த மோட்டார் சைக்கிள் மோதியதே விபத்திற்கு காரணம் என்று முதலில்  சொல்லப்பட்டது. ஆனால், கார் தான் இருசக்கர வாகனம் மீது மோதியதாக அப்பகுதியில் உள்ளவர்கள் கூறினர். இதனால் நடிகை ஜரீன் கானிடம் தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது. முன்னதாக நடிகை ஜரீன் கான் தனது மேலாளர் மீது மோசடி மற்றும் மிரட்டல் புகார் கொடுத்திருந்தது குறிப்பிடத்தக்கது.

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories

உயிர் போய் உயிர் வந்துருக்கு!" - பயங்கர கார் விபத்தில் சிக்கிய ரஜினி பட நடிகை நோரா ஃபதேஹி!
ஜவ்வா இழுக்கும் இயக்குநர்; ரொம்பவே ஒர்ஸ்ட்; சிறகடிக்க ஆசை சீரியலை கழுவி ஊற்றும் நெட்டிசன்கள்!