
நடிகை கடத்தல் வழக்கில் ஜாமீனில் வெளியே வந்த நடிகர் திலீப் வெளிநாடு செல்ல அனுமதி கோரி கேரள உயர்நீதிமன்றத்தில் மனு கொடுத்திருந்தார்.
இத வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. அதில் திலீப் தரப்பில் கூறப்பட்டு உள்ளது என்னவென்றால், "வரும் 29 ஆம் தேதி துபாயில் உணவக திறப்பு விழாவில் பங்கேற்க அனுமதி வேண்டும் எனவும் அதற்காக தனக்கு பாஸ்போர்ட்டையும் தர ஆவண செய்யுமாறு கோரிக்கை வைத்திருந்தார்.
இதனை தொடர்ந்து துபாயில் 29ம் தேதி உணவக திறப்பு விழாவில் பங்கேற்க அனுமதி அளித்து கேரள உயர்நீதிமன்றம் அனுமதி அளித்தது.
வெளிநாடு செல்ல அனுமதி வழங்கியதுடன் 7 நாட்களுக்கு பாஸ்போர்ட்டை தரவும் கேரள நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
அனுமதி கிடைத்த மகிழ்ச்சியில் உள்ள நடிகர் திலீப் தற்போது வெளிநாடு செல்ல ஆயத்தமாகி வருகிறார்.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.