உனக்கெல்லாம் படங்களை விமர்சிக்க தகுதியே இல்லை..! ப்ளூ சட்டை மாறனை நேரடியாக தாக்கி பேசிய இயக்குனர் பேரரசு!

By manimegalai a  |  First Published Oct 4, 2022, 10:54 PM IST

ஏற்கனவே திரைப்படங்கள் குறித்து, தரைகுறைவாக விமர்சனம் செய்வதாக ப்ளூ சட்டை மாறனுக்கு எதிராக சிலர் போர்க்கொடி தூக்கி வரும் நிலையில், இயக்குனர் பேரரசு நேரடியாகவே தாக்கி பேசியுள்ளார்.
 


திரைப்பட விமர்சகரும், இயக்குனருமான ப்ளூ சட்டை மாறன் ரசிகர்களின் ஆதரவோடு, வெற்றி பெற்ற திரைப்படங்களை கூட மிகவும் மோசமாக விமர்சனம் செய்து அடிக்கடி சர்ச்சைகளில் சிக்குவது உண்டு. அந்த வகையில், கடந்த மாதம் இயக்குனர் கெளதம் மேனன் இயக்கத்தில் சிம்பு நடிப்பில் வெளியான 'வெந்து தணிந்தது காடு' படத்திற்கு இவர் கொடுத்த விமர்சனம் இயக்குனர் கெளதம் மேனனனையே கடுப்பாக செய்த்து. மேலும் சிம்புவின் ரசிகர்கள் மன்றத்தை சேர்ந்தவர்கள் ப்ளூ சட்டை மாறனுக்கு எதிராக, அவரது போஸ்டரை எரித்து தங்களின் எதிர்ப்பை வெளிப்படுத்தினர்.

100 கோடி கிளப்பில் இணைந்த திருச்சிற்றம்பலம் திரைப்படத்தை கூட... முடிந்தவரை கழுவி ஊற்றிவிட்டு பின்னர் நல்லா இருக்கு என சொல்வார். அவர் செய்த விமர்சனத்திக்கரும்... நல்லா இருக்குனு சொன்னதுக்கு சம்பந்தமே இல்லாதது போல் தான் தோன்றும்.இப்படி தொடர்ந்து விமர்சனங்கள் மூலம் விமர்சிக்கப்பட்டு வரும் ப்ளூ சட்டை மாறனை நேரடியாகவே தாக்கி பேசி உனக்கெல்லாம் விமர்சனம் செய்ய தகுதியே இல்லை என கூறியுள்ளார் இயக்குனர் பேரரசு.

Tap to resize

Latest Videos

மேலும் செய்திகள்: பிக்பாஸ் கேப்ரியல்லாவுடன் காதலா..? இருவருக்கும் இடையே உள்ள உறவு குறித்து உண்மையை உடைத்த ஆஜித்!
 

செய்தியாளர்களை சந்தித்து பேசிய இயக்குனர் பேரரசு 'ஆன்டி இந்தியன்' என்கிற படம் எடுத்தார் இல்ல... அவரால் ஒரு படம் எடுத்து, வெற்றி கொடுக்க முடியவில்லை... உனக்கெல்லாம் மற்ற படத்தை பற்றி விமர்சிக்க எந்த தகுதியும் இல்லை. விமர்சனம் என்பது நாகரீகமாக இருக்க வேண்டும், அடுத்தவர் மனதை காயப்படுத்துவது போல் இருக்க கூடாது. என்னுடைய படத்தை விமர்சித்துள்ளார்கள் அடுத்த படத்தில் இந்த தவறுகள் இருக்க கூடாது என இயக்குனரை சிந்திக்க வையுங்கள் அது தான் விமர்சனம். 

மேலும் செய்திகள்: சிவகார்த்திகேயனின் 'பிரின்ஸ்' படத்தின் ரிலீஸ் எப்போது தெரியுமா?
 

அதை விட்டு விட்டு ஒரே படத்தை விமர்சித்து சாகடிப்பது விமர்சனம் இல்லை... கொலைக்கு சமம். பின் விமர்சகர்கள் மீது இருக்கும் மரியாதையே  இல்லாமல் போய் விடும். ரஜினி, விஜய், போன்ற நடிகர்களை திட்டினால் வியூஸ் கூடுகிறது. இப்படி செய்வது விமர்சனம் இல்லை... விமர்சனத்தில் ஒரு நியாயம், ஒரு தர்மம் இருந்தால் தான் விமர்சனம் என கூறியுள்ளார்.
 

click me!