அரசியல் தொல்லையால்... அடையாளத்தை தொலைத்து, பயந்து ஒதுங்கிய பெப்சி உமா..!

 
Published : Nov 15, 2017, 06:58 PM ISTUpdated : Sep 19, 2018, 01:27 AM IST
அரசியல் தொல்லையால்... அடையாளத்தை தொலைத்து, பயந்து ஒதுங்கிய பெப்சி உமா..!

சுருக்கம்

pepsi uma felt in political attack

பிரபல தொலைக்காட்சியில் ஒலிபரப்பாகிய ஒரு நிகழ்ச்சியில் தொகுப்பாளராக இருந்து, சினிமா பிரபலங்களை விட அதிகமான ரசிகர்களை வைத்திருந்தவர்தான் தொகுப்பாளர் பெப்சி உமா.

எம்.பி.ஏ பட்டதாரியான இவர் 1990 ஆம் ஆண்டு தூர்தர்ஷன் தொலைக்காட்சியில் தொகுப்பாளராக அறிமுகமானார். பின் பிரபல தொலைக்காட்சியில் "வாங்க வாழ்த்தலாம்" என்கிற நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார். 

இவருக்கு ரசிகர்கள் மத்தியில் அதிக வரவேற்பு இருந்ததால், இவருக்காகவே 'பெப்சி உமா" என்கிற நிகழ்ச்சி உருவாக்கப்பட்டு அந்த நிகழ்ச்சியை 15 வருடமாகத் தொகுத்து வழங்கி வந்தார். மேலும் UTV யின் சிறந்த தொகுப்பாளர் என்கிற விருதைப் பெற்ற முதல் தொகுப்பாளர் இவர் என்பது குறிப்பிடத்தக்கது.

இவருக்கு ரஜினி, கமல், சிவாஜி போன்றோருடன் நடிக்க வாய்ப்பு வந்த போது கூட இவர் அந்த வாய்ப்புகள் அனைத்தையும் தவிர்த்தவர். மேலும் கிரிக்கெட் வீரர் சச்சினுடன் பெப்சி விளம்பரத்தில் நடிக்க வாய்ப்புகள் வந்தபோது அதனையும் ஏற்காமல் இருந்தவர் தான் பெப்சி உமா என்கிற உமா மகேஸ்வரி.

தற்போது தன்னுடைய கணவரின் நிறுவனத்தை நிர்வகித்து வரும் இவருக்கு மீண்டும் சின்னத்திரையில் தொகுப்பாளராக வாய்ப்பு கிடைத்தது.  பிரபல தொலைக்காட்சியில் ஒரு நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார். நீண்ட நாட்களுக்குப் பின் இவர் சின்னத்திரையில் வந்தாலும் இவருக்கு, ஏகப்பட்ட வரவேற்பு கிடைத்தது. ஆனால் சில மாதங்கள் மட்டுமே அவர் இந்த நிகழ்ச்சியை நடத்தினார் பின் அந்த நிகழ்ச்சியில் இருந்தும் விலகினார்.

சமீபத்தில் ஏன் இந்த நிகழ்ச்சியை விட்டு விலகினீர்கள் என ஒரு நிகழ்ச்சியில் கலந்துகொண்ட இவரிடம் கேட்டபோது,  அரசியல் ரீதியாக பல்வேறு தொந்தரவுகள் இருந்ததால். எந்த ஒரு பிரச்சனையிலும் சிக்கிக் கொள்ளாமல் தன்னை காத்துக்கொள்ள விலகியதாக கூறினார்.

தொலைக்காட்சியில் சில நிமிடம் வந்தாலே ஓவர் சீன் போடும் இந்த உலகத்தில் ... மிகப் பெரிய ரசிகர் கூட்டத்தை வைத்திருந்தும் , பல வாய்ப்புகள் தேடி வந்தும் தன்னடக்கதோடு, தொகுப்பாளர் என்கிற அடையாளம் கூட வேண்டாம் என்று வாழ்ந்து வருகிறார் பெப்சி உமா.

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories

கால்பந்து ஜாம்பவான் மெஸ்ஸியை சந்தித்த பாலிவுட் ‘பாட்ஷா’ ஷாருக்கான் - வைரலாகும் வீடியோ
தனுஷை தொடர்ந்து விவாகரத்து சர்ச்சையில் சிக்கிய செல்வராகவன்..?