
கந்து வட்டி விவகாரத்தில் நெல்லையில் ஒரு குடும்பமே தீக்குளிப்புக்கு பலியானபோது மிகவும் பொங்கி புலம்பினார் நடிகர் விஷால். இந்நிலையில் இவர் மீதே இயக்குநர் ஒருவர் ‘கந்துவட்டிக்கு ஈக்குவலா வட்டி போட்டிருக்கார்!’ என்று புலம்பும் விவகாரம் கோலிவுட்டை கோக்குமாக்காக முழிக்க வைக்கிறது.
என்ன பிரச்னை என்றால்...இயக்குநர் பூபதி பாண்டியனின் இயக்கத்தில் ‘பட்டத்து யானை’ எனும் படத்தில் நடித்தார் விஷால். அர்ஜூனின் மகள் ஐஸ்வர்யா ஹீரோயினாக நடித்த (!?) படம் அது. படம் செம பிளாப்.
சரி அதுதான் பல வருஷமாகிப்போச்சே! அதுக்குப் பிறகு விஷால் எத்தனையோ பிளாப் கொடுத்துவிட்டாரே, இப்போ அந்தப் படத்துக்கு என்ன? என்று நீங்கள் கேட்டால், கீழே அதற்கு விடை இருக்கிறது...
அதாவது அந்தப் படத்தில் நடிக்கும் போதே ‘எனது அடுத்த படத்தையும் நீங்கதான் இயக்குறீங்க’ என்று சொல்லி பூபதியின் கையில் முப்பத்தைந்து லட்சத்தை கொடுத்தாராம் விஷால். ஆனால் பட்டத்து யானை படுத்துவிட்டது. இதனால் உடனடியாக பூபதி கையிலிருந்து முப்பது லட்சத்தை வாங்கி விட்டார் விஷால். மீதி ஐந்து லட்சத்தை இவர் கேட்டுக் கொண்டே இருக்க அவரோ இதோ, அதோ என்று தள்ளிக் கொண்டே போயிருக்கிறார்.
இந்நிலையில் சமீபத்தில் பூபதிக்கு ஒரு கணக்கை அனுப்பிய விஷால் அதில் அந்த 5 லட்சத்துக்கு வட்டிகளைப் போட்டு 27 லட்சமாக திருப்பித்தர கேட்டிருக்கிறார்.
பூபதிக்கு பியூஸ் போன மாதிரி ஆகிவிட்டது. அவர் வாய் மூடி நிற்க, விஷாலோ பூபதி மேல் இயக்குநர்கள் சங்கத்தில் புகார் கொடுத்திருக்கார் கெத்தாக. ஆனால் அந்த சங்கமோ விஷால் போட்ட வட்டி தாவித்தாவி ஏறிய கிராஃபை பார்த்து கிறங்கிப்போய்விட்டார்களாம். கூடவே இந்த மாதிரி வட்டி விவகாரத்துக்கெல்லாம் பஞ்சாயத்து செய்ய முடியாது என்று சொல்லிவிட்டார்களாம்.
பஞ்சராய் போன பூபதியோ சக இயக்குநர்களிடம், ‘கந்துவட்டிக்கு எதிரா எப்படியெல்லாம் கருத்து சொல்லி சீன் போட்டாரு! ஆனா இந்தாளு எனக்கு போட்டிருக்கிற வட்டியை பாருங்க. இந்த கணக்கை கேட்டா கந்து வட்டியே நொந்து போகும்.’ என்று ரைமிங்காக புலம்பிக் கொட்டியிருக்கிறார் அந்த துயரத்திலும்.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.