யாருக்கும் தெரியாமல் சீக்கிரட்டாக வைத்திருந்த ராம்கி? சூப்பர் தகவலை வெளியிட்ட பெப்சி உமா!

Published : Jun 27, 2020, 07:05 PM IST
யாருக்கும் தெரியாமல் சீக்கிரட்டாக வைத்திருந்த ராம்கி? சூப்பர் தகவலை வெளியிட்ட  பெப்சி உமா!

சுருக்கம்

90 களில் நடிகர் - நடிகைகளுக்கு இணையாக ஃபாலோவர்சை வைத்திருந்த தொகுப்பாளினி பெப்சி உமா. இவருடைய நிகழ்ச்சி ஒளிபரப்பாகும் நாட்களில், கண்டிப்பாக இவருடைய ரசிகர்கள் டிவி முன் ஆஜராகி விடுவார்கள்.  

லட்சக்கணக்கான ரசிகர்கள் இருந்தும், கொஞ்சம் கூட அலட்டி கொள்ளாமல், அனைவரிடத்திலும் சிரித்த முகத்தோடு பேசுவது தான் இவருடைய ஸ்பெஷல். அதே போல் இவரையும் தங்களுடைய குடும்பத்தில் ஒருவர் என நினைத்த ரசிகர்களும் பலர் உள்ளனர்.

மேலும் செய்திகள்: திருமணத்தில் வனிதாவுக்கு லிப் கிஸ் கொடுத்து காதலை வெளிப்படுத்திய பீட்டர் பால்..! செம்ம ரொமான்ஸ்..!
 

எவ்வளவு பெயர் புகழ் வந்தாலும், அதனை வெளியிலும் தன்னுடைய உடையிலும் காட்டாமல், சாதாரணமாக சேலை மட்டும் சுடிதாரில் மட்டுமே இவரை பார்க்க முடியும். குறிப்பாக இந்த காலத்து தொகுப்பாளினிகள் போல் அரை குறை உடையில் இவரை பார்க்கவே முடியாது.

திரைப்பட வாய்ப்புகள் வந்தும் அதனை ஏற்காமல், டிவி நிகழ்ச்சியில் இருந்து ஒதுங்கி இருக்கும் இவர் நீண்ட வருடங்களுக்கு பின் பிரபல நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டு, உரையாற்றியுள்ளார். அப்போது பல சுவாரஸ்ய தகவல்கள் மற்றும் நடிகர்கள் பற்றி பகிர்ந்து கொண்டார். அந்த வகையில், 90 களில் முன்னணி நடிகராக வலம் வந்த, நடிகர் ராம்கி பற்றி பேசியுள்ளார்.

மேலும் செய்திகள்: உடல் எடையை குறைத்து... மீண்டும் ஹீரோயின் லுக்கிற்கு மாறிய 90'ஸ் களின் கனவு கன்னி மந்த்ரா...!
 

அதாவது பல  வெற்றி படங்களில் நடித்து ரசிகர்கள் மனதில் இடம் பிடித்துள்ள, அவருக்கு நன்கு ஜோசியமும் தெரியும் என கூறியுள்ளார் பெப்சி உமா. மேலும் எலேக்ட்ரோனிக் பொருள் சேர்ப்பதிலும் அவருக்கு மிகவும் ஆர்வம் அதிகம் என்பதையும் தெரிவித்துள்ளார். 

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories

என்னுடைய மகனுக்கு வேறொரு பெண்ணுடன் தொடர்பா? கொந்தளித்த கோமதி: பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியல்!
நடிகை தாக்கப்பட்ட வழக்கில் குற்றவாளிகள் விய்யூர் சிறைக்கு மாற்றம்; நடிகர் திலீப் விடுதலை!