நிம்மதியா வாழ விடுங்க... விமான நிலையத்தில் அஜித்துக்கு தொல்லை கொடுத்த ரசிகர்களுக்கு வசமான டோஸ்!

By SG Balan  |  First Published Aug 24, 2023, 4:34 PM IST

அஜித் ஏர்போர்ட் வீடியோ சமூக வலைத்தளங்களில் வெளியானதை அடுத்து அவரது ரசிகர்களின் செயலை நெட்டிசன்கள் பலரும் கண்டித்து, அறிவுரை கூறியுள்ளனர்.


லைம்லைட்டில் இருந்து முற்றிலும் விலகி இருக்க விரும்பும் மிக அரிதான நட்சத்திரங்களில் அஜித் குமாரும் ஒருவர். கடந்த சில மாதங்களாக தனது ஐரோப்பா பைக் பயணத்தில் பிஸியாக இருந்த அவர், தற்போது இறுதியாக சென்னை திரும்பியுள்ளார். ஆகஸ்ட் 23, புதன்கிழமை சென்னை விமான நிலையத்தில் தரையிறங்கிய அஜித்தை அவரது வெறித்தனமான ரசிகர்கள் கும்பலாக வந்து மொய்த்தனர்.

விமான நிலையத்தில் அஜித்

Tap to resize

Latest Videos

அஜித் குமார் எப்போதும் போல பாதுகாப்பை தவிர்த்து விமான நிலையத்தை விட்டு தானாகவே வெளியேறினார். இருப்பினும், விமான நிலையத்தில் அஜித்தைக் கண்ட அவரது தீவிர ரசிகர்கள் அவரைச் சூழ்ந்துகொண்டு அவருடன் போட்டோ எடுக்கவும் கை கொடுக்கவும் முயற்சி செய்தனர்.

Chandrayaan-3: சந்திரயான்-3 வெற்றியை வெளிநாடு வாழ் இந்தியர்களுடன் கொண்டாடிய பிரதமர் மோடி

AK is back to Chennai!!pic.twitter.com/H3LKZ6Dm8e

— Christopher Kanagaraj (@Chrissuccess)

இந்த சம்பவத்தின் வீடியோ இப்போது சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது. வீடியோவில், அஜித் அசௌகரியத்துடன் தனது காரை நோக்கி விரைவதைக் காணலாம். ஒருவரது தனியுரிமையை மதிக்க வேண்டும் என்றெல்லாம் கவலைப்படாத ரசிகர்கள், தங்கள் மொபைல் போன்களுடன் அவரைப் பின்தொடர்ந்தனர். அவ்வளவு பேர் சூழ்ந்துகொள்ளும்போது தனது லக்கேஜுடன் நடப்பது அஜித்துக்கு சிரமமாக இருந்ததை வீடியோவில் காணமுடிகிறது.

அஜித் ரசிகர்களுக்கு அட்வைஸ்

அஜித் ரசிகர்களோ இதைப்பற்றி எல்லாம் சிறிதும் யோசிக்காமல் செல்ஃபிக்காக அவரை சுற்றி வளைத்தனர். இந்தக் காட்சியை வீடியோவில் பார்த்த நெட்டிசன்கள் பலர் அஜித்தை துரத்திச் சென்ற ரசிகர்களுக்கு வசமாக டோஸ் கொடுத்துள்ளனர். நிறைய பேர் அந்த ரசிகர்களின் நடத்தை குறித்து ஆழ்ந்த அதிருப்தியை வெளிப்படுத்தியுள்ளனர்.

"மக்கள் சில நல்ல பழக்கவழக்கங்களைக் கற்றுக்கொள்ள வேண்டும்" என்று பயனர் கருத்து தெரிவித்துள்ளார். அவரை நிம்மதியாக வாழ விடுங்கள் என மற்றொரு நெட்டிசன் கூறியுள்ளார். தயவுசெய்து அவரது பிரைவசி மற்றும் பெர்சனல் விஷயங்களுக்கு மதிப்பு கொடுங்கள் என்று வேறொரு பயனர் தெரிவித்துள்ளார்.

Redmi A2+ மொபைலின் புதிய 128 GB மாடல் வந்தாச்சு! விலையைக் கேட்டா ஆச்சரியமா இருக்கும்!

click me!