
படத்திற்காக மாறு வேடத்தில் இருந்த நடிகர் சூர்ய வர்மனை பொதுமக்கள் சூழ்ந்துக்கொண்டு தர்ம அடி கொடுத்துள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
கோலிவுட்டில் பல புதுமுக நடிகர்கள் தொடர்ந்து களம் இறங்குகிறார்கள். அதிலும் ஒரு சிலர் தான் மக்கள் மனதில் இடம் பிடிக்கிறார்கள்.. மற்றவர்களால் ஏதோ ஒரு சில படங்களில் சிறிய சிறிய ரோல்களில் நடிப்பார்கள்.
இதெல்லாம் ஒருபக்கம் இருக்க, இளம் நடிகரான சூர்யா வர்மன் ‘காதல் எனக்கு பிடிக்கும்’என்ற படத்தில் நடித்து வருகிறார்
இந்த படத்தின் படப்பிடிப்பு வேலூரில் நடந்து வருகிறது. இந்த படத்தில் நடிகர் சூர்யவர்மன் முகமூடி அணிந்து இந்த படத்தில் நடிக்கும் காட்சி இடம் பெற உள்ளது.
இந்த படத்தில் ஹீரோ ஹீரோயின்கள் என்ற காதாபாத்திரம் யாரும் கிடையாது. இதில் முக மூடி அணிந்தவாறு சூர்ய வர்மன் நடித்து உள்ளார்.
இதற்கிடையில் முக மூடி அணிந்து ஊருக்குள் சுற்றி வந்துள்ளார் சூர்ய வர்மன். அப்போது இவரை பார்த்த பொதுமக்கள் யாரோ குழந்தை கடத்த வந்த மர்மநபர் என எண்ணி பொதுமக்கள் தர்ம அடி கொடுத்து உள்ளனர்.
பிறகு இந்த செய்தி படக்குழுவினருக்கு தெரியவரவே, சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தவர்கள் படப்பிடிப்பு குறித்து விளக்கவே பின்னர் அவரிடம் வருத்தம் தெரிவித்து உள்ளனர் பொதுமக்கள்.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.