
திரைத்துறையில் சாதிக்க வேண்டும் என பல்வேறு ஆசையுடன் சினிமாவிற்குள் நுழைந்து, பல்வேறு சோதனைகளை தாண்டி வெற்றி பெறுபவர்கள் சிலர் தான். இப்படி தனக்கான இடத்தை பிடித்த போதிலும் வாழ்க்கையில் ஏற்படும் பிரச்சனையை சமாளிக்க முடியாமல் சிலர் தற்கொலை தான் தீர்வு என நினைக்கிறார்கள்.
இந்நிலையில் தெலுங்கு சினிமாவை சேர்ந்த இளம் இசையமைப்பாளர் அனுராக் வினில் தற்கொலை செய்துக்கொண்டுள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
அவர் பல இடங்களில் இசை நிகழ்ச்சிகளை நடத்தி வருவதோடு, படங்களுக்கும் இசையமைத்து வருகிறார். வளர்ந்து வரும் இசையமைப்பாளரான இவருக்கும் பல ரசிகர்கள் இருக்கிறார்கள்.
இந்நிலையில், கடந்த வாரம் தற்கொலை செய்துக்கொண்டு இறந்த இவரின் மரண பின்னணி குறித்து போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வந்தனர். ஆனால் அவர் இறந்த காரணம் தெரியவில்லை.
மேலும் அவருடைய வீட்டை சோதனை செய்ததில் எந்த கடிதமும் கிடைக்கவில்லை. ஆனால் அவர் போதைக்கு அடிமையாகி இருந்தது மட்டும் நபர்கள் மூலம் தெரியவந்தது. பின் தொடர்ந்து விசாரணை செய்ததில் இவருடைய தற்கொலைக்கு காரணம் அவரின் பெண் தோழி ஒருவர் தான் என கூறப்பட்டது. இருவரும் ஒருவருக்கொருவர் காதலித்து வந்ததாகவும், இவர்கள் காதலுக்கு ஒரு சிலரால் பிரச்சனை ஏற்பட்டதால் மனமுடைந்து, இவர் தன் வீட்டில் யாரும் இல்லாத பொது தற்கொலை செய்துகொண்டார் என கூறப்படுகிறது.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.