இது என்னோட ஷர்ட் தானே..! ”தமிழ் படம் 2.0” சிவாவை கலாய்த்த தளபதி விஜய்…!

Asianet News Tamil  
Published : Jun 16, 2018, 01:04 PM ISTUpdated : Sep 19, 2018, 02:32 AM IST
இது என்னோட ஷர்ட் தானே..! ”தமிழ் படம் 2.0” சிவாவை கலாய்த்த தளபதி விஜய்…!

சுருக்கம்

actor vijay appreciates tamil padam 2.0 team for this reason

தமிழ்படம் 2.0 திரைப்படம் இயக்குனர் அமுதன் இயக்கத்தில், மிர்ச்சி சிவா நடிப்பில் தயாராகி வருகிறது. விரைவில் திரைக்கு வர இருக்கும் இந்த திரைப்படத்தின் டீசர், சமீபத்தில் ரிலீசாகியது. இந்த படத்தில் தமிழில் இதுவரை ரிலீசாகி இருக்கும் அத்தனை திரைப்படங்களையும், தாறுமாறாக கலாய்த்திருந்தார் இயக்குனர் அமுதன்.

மேலும் தமிழக அரசியல்வாதிகள் சிலரையும் இப்படத்தில் கலாய்த்திருக்கின்றனர். இதையெல்லாம் தாண்டி ஒரு படி மேலே போய், அமெரிக்க அதிபர் டிரம்பினையும், ஒரு காட்சியில் கலாய்த்திருக்கின்றனர் தமிழ்படம் 2.0 படக்குழு.  இதனால் இந்த டிரெயிலர் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றிருக்கிறது.

இந்த டிரெயிலரின் ஒரு காட்சியில் தளபதி விஜய் நடித்து, சூப்பர் ஹிட் ஆகிய துப்பாக்கி திரைப்படத்தில் வரும் காட்சியை, கலாய்த்திருந்தார்கள். பொதுவாகவே விஜய் தன் மனதுக்கு பிடித்த விஷயங்களை, மனமாற பாராட்டிவிடுவார். இந்த டிரெயிலரை பார்த்த பிறகு அதை தான் செய்திருக்கிறார் விஜய்.

 இந்த டிரெயிலரை பார்த்துவிட்டு சிவாவிற்கு ஃபோன் செய்த விஜய், "என்ன சிவா, டிரெயிலர்ல வர சீன்ல, ஷர்ட் எங்கேயோ பார்த்த மாதிரியே இருக்கே?” என கேலி செய்திருக்கிறார். மேலும் இந்த டிரெயிலர் தனக்கு ரொம்ப பிடித்திருந்தது எனவும் பாராட்டி இருக்கிறார்.

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories

Actress Urvashi : மகளுடன் கமலை சந்தித்த ஊர்வசி! அம்மாவின் அழகை மிஞ்சும் மகளின் ப்யூட்டிபுள் போட்டோஸ்
Dhanush Net Worth : விளம்பரத்திற்கே கோடிகளில் சம்பளம்.. வாயை பிளக்க வைக்கும் ஆடம்பர வீடு, கார்கள்.. தனுஷின் சொத்து மதிப்பு இவ்வளவா?