கமல் ”பிக்பாஸ்” தொகுத்து வழங்க காரணம், அரசியல் நோக்கமா? ரசிகரின் கேள்விக்கு ஸ்ரீபிரியாவின் அதிரடி பதில்…!

Asianet News Tamil  
Published : Jun 16, 2018, 12:37 PM ISTUpdated : Sep 19, 2018, 02:32 AM IST
கமல் ”பிக்பாஸ்” தொகுத்து வழங்க காரணம், அரசியல் நோக்கமா? ரசிகரின் கேள்விக்கு ஸ்ரீபிரியாவின் அதிரடி பதில்…!

சுருக்கம்

famous actress support Kamal by answering this question

கடந்த ஆண்டு சின்னத்திரையில் ஒளிபரப்பாகி, ஒட்டு மொத்த தமிழகத்திலும் தினம் பரபரப்பை ஏற்படுத்திய நிகழ்ச்சி பிக் பாஸ். மக்களால் பலவாறு விமர்சிக்கப்பட்டாலும், இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அனைவருமே, இன்று திரைத்துறையில் நல்ல நிலையில் முன்னெறி இருக்கின்றனர்.

இந்த பிக்பாஸ் நிகழ்ச்சியின் அடுத்த சீசன், நாளை முதல் ஒளிபரப்பாக இருக்கிறது. இந்த நிகழ்ச்சியை கடந்த முறை தொகுத்து வழங்கிய அதே கமலஹாசன் தான், இந்த முறையும் பிக்பாஸை தொகுத்து வழங்க இருக்கிறார்.

கமலின் அரசியல் வாழ்க்கைக்கு, இந்த பிக்பாஸ் நிகழ்ச்சி தான் ஒரு நல்ல தொடக்கத்தை கொடுத்தது. கமல் அரசியலுக்கு வரப்போவதை சூசகமாக அறிவித்ததே இந்த நிகழ்ச்சி மூலம் தான். அப்படி இருக்கையில் தற்போது கமல் தனிக்கட்சி ஆரம்பித்திருக்கிறார். இதனால் ஒரு அரசியல்வாதி தான் இம்முறை பிக் பாஸ் நிகழ்வை தொகுத்து வழங்க போகிறார்.

இந்நிலையில் கமலின் தோழியான நடிகை ஸ்ரீபிரியா கமலின் கட்சியில் இணைந்திருக்கிறார். அவரிடம் பிக்பாஸ் ரசிகர் ஒருவர், கமல் அரசியலுக்கு செலவு செய்ய பணம் இல்லைனு தான், பிக் பாஸ் நிகழ்ச்சி மூலம் சம்பாதிக்கிறாரா? என கேள்வி எழுப்பி இருக்கிறார்.

அதற்கு பதிலளித்த ஸ்ரீபிரியா அப்படி செய்தால் என்ன தப்பு. அவர் ஒன்றும் மக்களின் பணத்தை கொள்ளை அடித்து அரசியல் செய்யவில்லை. அவருக்கு தெரிந்த பணியை செய்துதானே அவர் சம்பாதிக்கிறார். என காட்டமாக பதிலளித்திருக்கிறார்.

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories

மிருணாள் தாக்கூருக்கு முன் தனுஷ் உடன் காதல் கிசுகிசுவில் சிக்கிய நடிகைகள் இத்தனை பேரா?
விஜய்க்கு தொடரும் சிக்கல்.. ஜனநாயகன் படக்குழு vs சென்சார் போர்டு.. உயர்நீதிமன்றத்தில் அனல்பறந்த வாதம்!