சிம்பு நடித்து முடித்துள்ள, 'பத்து தல' திரைப்படத்தின் ஆடியோ லான்ச் குறித்த வீடியோ தற்போது வெளியாகி வைரலாகி வருகிறது.
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருக்கும் சிம்பு தற்போது நடித்து முடித்துள்ள திரைப்படம் 'பத்து தல'. இந்த படத்தின் இசைவெளியீட்டு விழா சற்று முன் துவங்கிய நிலையில், இது குறித்த வீடியோக்கள் சில சமூக வலைதளத்தில் வெளியாகி வைரலாக பார்க்கப்பட்டு வருகிறது.
நடிகர் சிம்பு, 'வெந்து தணிந்தது காடு' படத்தைத் தொடர்ந்து, மீண்டும் எ ஜி ஆர் என்கிற கேங் ஸ்டார் கதாபாத்திரத்தில் நடித்துள்ள திரைப்படம் 'பத்து தல'. இயக்குனர் ஒப்பிலி கிருஷ்ணா இயக்கத்தில் உருவாகியுள்ள இந்த படம், கன்னட சூப்பர் ஸ்டார் சிவராஜ் குமார் நடிப்பில் வெளியாகி பிளாக் பஸ்டர் ஹிட் அடித்த 'முஃட் படத்தின் ரீமைக்காக எடுக்கப்பட்டுள்ளது.
இப்படத்தின் படப்பிடிப்பு ஏற்கனவே முடிவடைந்து விட்ட நிலையில், மார்ச் 30ஆம் தேதி இப்படம் உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாக உள்ளது. இந்நிலையில் இன்று இப்படத்தின் இசை வெளியீட்டு விழா நேரு உள்விளையாட்டு அரங்கில் மிகப் பிரம்மாண்டமாக நடைபெற்று வருகிறது. இதில் 'பத்து தல' படத்தில் நடித்துள்ள நடிகர் சிம்பு, கௌதம் கார்த்திக், பிரியா பவானி சங்கர், இசையமைப்பாளர் ஏ ஆர் ரகுமான் உள்ளிட்ட பலர் கலந்து கொள்ள உள்ளனர்.
தற்போது இசை வெளியீட்டு விழா பிரம்மாண்டமாக துவங்கி உள்ள நிலையில், நேரு ஸ்டேடியம் முழுவதும் சிம்புவின் ரசிகர்கள் வெள்ளத்தால் சூழ்ந்துள்ளது. இது குறித்த வீடியோ தற்போது வெளியாகி சமூக வலைத்தளத்தில் படு வைரலாக பார்க்கப்பட்டு வருகிறது. மேலும் இசை வெளியீட்டு விழாவோடு இன்றைய தினம் 'பத்து தல' படத்தின் டிரைலர் வெளியீடு குறித்த அறிவிப்பும் வெளியாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
It's time to turn up the volume🔊Get ready for the biggest audio launch of the year as unveils its electrifying music! & ⭐er Grand Audio Launch now streaming LIVE 👉🏼 https://t.co/NqFlG7vM5O pic.twitter.com/gzwMaF4KgC
— Studio Green (@StudioGreen2)