ரஜினி சிறந்த நடிகர் என சொல்ல முடியுமா? சிவாஜி படத்திற்காக கொடுத்த மாநில அரசு விருதை லாபி என விமர்சித்த அமீர்!

Published : Mar 18, 2023, 11:14 AM IST
ரஜினி சிறந்த நடிகர் என சொல்ல முடியுமா? சிவாஜி படத்திற்காக கொடுத்த மாநில அரசு விருதை லாபி என விமர்சித்த அமீர்!

சுருக்கம்

பிரபல தமிழ் திரைப்பட இயக்குனர் அமீர் தற்போது வழங்கப்படும் விருதுகள் எல்லாமே லாபி தான் என்று கூறி, நடிகர் ரஜினிகாந்த்தின் 'சிவாஜி' படத்திற்காக கொடுத்த மாநில விருதை விமர்சித்துள்ள சம்பவம் பரபரப்பு ஏற்படுத்தியுள்ளது.  

இயக்குனர் பாலா இயக்கத்தில் வெளியாகி சூப்பர் ஹிட் வெற்றிபெற்ற சேது, நந்தா, போன்ற படங்களில் துணை இயக்குனராக பணியாற்றிய பின்னர்... கடந்த 2002 ஆம் ஆண்டு வெளியான 'மௌனம் பேசியதே' திரைப்படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் அமீர். இவரின் முதல் படத்திற்கு நல்ல வரவேற்பு கிடைத்த நிலையில், இப்படத்தை தொடர்ந்து ராம், பருத்திவீரன், ஆதி பகவான், போன்ற படங்களை இயக்கினார்.

குறிப்பாக இவர் இயக்கத்தில் நடிகர் கார்த்தி நடிப்பில் கடந்த 2007 ஆம் ஆண்டு வெளியான பருத்திவீரன் திரைப்படம், பல்வேறு விருதுகளை வாங்கி குவித்தது. அதை போல் இந்த படத்தில் நடித்திருந்த நடிகை பிரியா மணிக்கு சிறந்த நடிகைக்கான தேசிய விருதையும் பெற்று கொடுத்தது. சமீபகாலமாக திரைப்படங்கள் இயக்குவதை தாண்டி நடிகராகவும் கலக்கி வரும் அமீர், வரும் 24ம் தேதி zee5 ott தளத்தில் வெளியாக உள்ள 'செங்களம்' என்ற இணைய தொடர் இணைய தொடரின் ட்ரைலர் வெளியீட்டு விழாவில் கலந்து கொண்டார்.

'கண்ணை நம்பாதே' உதயநிதியை காப்பற்றியதா? காலைவாரியதா... முதல் நாள் பாக்ஸ் ஆபிஸ் நிலவரம் !

அப்போது செங்களம் இணைய தொடரின் இயக்குனர் எஸ் ஆர் பிரபாகரன் இந்த டெத் தொடரின் கதையை என்னை நினைத்து தான் எழுதியதாக கூறி கண்டிப்பாக இத்தொடர் வெற்றி பெறும் என்று கூறி, இதில் நடித்திருக்கும் வாணி போஜன், டேனியல், விஜி சந்திரசேகர், போன்ற அனைவருக்கும் தன்னுடைய வாழ்த்துக்களை தெரிவித்தார்.

முதல் முறை உடலுறவில் ஈடுபடும் போது... தவறான புரிதலால் ஏற்படும் பிரச்சனைகள்! வெளிப்படையாக பேசிய சின்மயி!

பின்னர் செய்தியாளர்கள், அமீரிடம் ஆஸ்கர் விருது குறித்து... கேள்வி எழுப்பப்பட்டது, இதற்கு மிகவும் எளிமையாக பதில் அளித்த அமீர், ஆஸ்கர் விருது என்பது அந்த நாட்டில் வழங்கப்படும் தேசிய விருது தான் என தன்னுடைய கருத்தை கூறினார். அதே போல் இந்தியாவிலேயே மிகச் சிறந்த நடிகராக பார்க்கப்படும் சிவாஜி கணேசனுக்கு ஏன் தேசிய விருது கொடுக்கப்படவில்லை? என்று கேள்வி எழுப்பிய அவர் தேவர் மகன் படத்தில் சிவாஜிக்கு சிறப்பு விருது வழங்கப்பட்டது. ஆனால் இது தொடர்பாக பேசிய சிவாஜி இது கொடுக்கப்படவில்லை, அந்த குழுவில் இருந்த நம்முடைய ஆட்களால் வற்புறுத்தி கொடுக்கப்பட்டது என அவரே தெரிவித்திருந்தார்.

எனவே 30 ஆண்டுகளுக்கு முன்பே சிறந்த விருதுகள் எல்லாம் கொடுத்து முடிக்கப்பட்டு விட்டன. இப்போது வழங்கப்படும் விருதுகள் எல்லாமே லாபி தான் என விமர்சனத்தை முன் வைத்தார். அதேபோல், இயக்குனர் சங்கர் இயக்கத்தில் 2007 ஆம் ஆண்டு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான சிவாஜி படத்தில் நடித்ததற்காக,  சிறந்த நடிகர் என்ற பிரிவில் ரஜினிகாந்துக்கு மாநில அரசின் விருது வழங்கப்பட்டது. இப்படத்தில் நடித்த ரஜினிகாந்தை சிறந்த நடிகர் என சொல்ல முடியுமா? என கேள்வி எழுப்பினார். ரஜினிகாந்த், ஒரு என்டர்டெயினர் அவ்வளவுதான். ஆனால் சிவாஜி படத்தில், சிறப்பு நடிப்பு இருந்ததா என்ற கேள்வியை முன் வைத்ததுடன்... ரஜினியின் சிறந்த நடிப்பு வெளிப்படுத்தப்பட்ட திரைப்படம் என்றால் முள்ளும் மலரும், ஆறிலிருந்து அறுபது வரை, போன்ற படங்கள்தான். ஆனால் அப்படங்களுக்கு ஏன் தேசிய விருது கொடுக்கப்படவில்லை? தற்போது கொடுக்கப்படும் விருதுகள் எல்லாமே லாபி தான். அமீர் சர்ச்சைக்கு வித்திடும் வகையில் கூறியுள்ளது பரபரப்பாக பார்க்கப்பட்டு வருகிறது.

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

Read more Articles on
click me!

Recommended Stories

அறந்தாங்கி நிஷாவின் பிரமிக்க வைக்கும் மாற்றம்: அழகுடன் ஆரோக்கியமும்; 50 நாட்களில் நடந்த ஆச்சரியம்!
ரிஸ்க் எடுத்து நடிச்ச படம்; 2025ல் வசூலில் நம்பர் இடம் பிடித்த குட் பேட் அக்லீ: பாக்ஸ் ஆபீஸ் அப்டேட் ரிப்போர்ட்!