பாலிவுட் நடிகை தீபிகா படுகோனேவுக்கு ஆஸ்கர் குழு அளித்துள்ள மாபெரும் அங்கீகாரம்... குவியும் வாழ்த்துக்கள்

By Ganesh A  |  First Published Mar 3, 2023, 9:22 AM IST

அமெரிக்காவில் நடைபெற உள்ள ஆஸ்கர் விருது விழாவை தொகுத்து வழங்க உள்ள பிரபலங்களின் பட்டியலில் தீபிகா படுகோனேவும் இடம்பெற்று உள்ளார். 


பாலிவுட்டில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் தீபிகா படுகோனே. இவர் தமிழிலும் ரஜினியுடன் கோச்சடையான் படத்தில் ஜோடியாக நடித்திருக்கிறார். இதையடுத்து பாலிவுட்டில் பிசியான தீபிகா, அங்கு ஷாருக்கான், ரன்வீர் சிங், ரன்பீர் கபூர் என பல்வேறு முன்னணி நடிகர்களுடன் நடித்து தற்போது பாலிவுட் திரையுலகின் டாப் ஹீரோயினாக வலம் வந்து கொண்டிருக்கிறார். 

சமீபத்தில் இவர் நடிப்பில் பதான் திரைப்படம் வெளியானது. இப்படத்தில் பாலிவுட் பாட்ஷா ஷாருக்கானுக்கு ஜோடியாக நடித்திருந்தார் தீபிகா. இதில் பாடல் ஒன்றில் காவி நிற பிகினி உடை அணிந்து நடனமாடியதற்காக தீபிகா படுகோனேவுக்கு கடும் எதிர்ப்பு கிளம்பியது. அப்படத்தை தடை செய்ய வேண்டும் என்றெல்லாம் குரல் கொடுத்து வந்தனர். இத்தனை எதிர்ப்புகளையும் மீறி ரிலீஸ் ஆன அப்படம் பாக்ஸ் ஆபிஸில் ரூ.1000 கோடிக்கு மேல் வசூலித்து சாதனை படைத்தது.

Tap to resize

Latest Videos

இதையும் படியுங்கள்... நடிகை சுஷ்மிதா சென்னுக்கு மாரடைப்பு..! அவரின் தற்போதைய நிலை குறித்து வெளியான பரபரப்பு தகவல்..!

பதான் படத்தின் வெற்றியால் குஷியில் இருக்கும் தீபிகா படுகோனேவுக்கு தற்போது மேலும் ஒரு அங்கீகாரம் கிடைத்துள்ளது. அது என்னவென்றால் வருகிற மார்ச் 12ந் தேதி அமெரிக்காவில் நடைபெற உள்ள ஆஸ்கர் விருது விழாவை தொகுத்து வழங்க உள்ள பிரபலங்களின் பட்டியலில் தீபிகா படுகோனேவும் இடம்பெற்று உள்ளார். மொத்தம் 16 பேர் அடங்கிய அந்த பட்டியலில் ஹாலிவுட் நடிகர் டுவைன் ஜான்சன் உள்பட ஏராளமான பிரபலங்கள் இடம்பெற்று உள்ளனர்.

95-வது ஆஸ்கர் விருது விழா தொகுப்பாளராக களமிறங்க உள்ள தீபிகா படுகோனேவுக்கு வாழ்த்துக்கள் குவிந்த வண்ணம் உள்ளன. இந்த ஆண்டு ஆஸ்கர் விழாவின் இறுதி நாமினேஷன் பட்டியலில் ராஜமவுலி இயக்கிய ஆர்.ஆர்.ஆர் படத்தின் நாட்டு நாட்டு பாடலும் இடம்பெற்று உள்ளது. அப்பாடலுக்கு ஆஸ்கர் விருது கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதற்காக ஆர்.ஆர்.ஆர் படக்குழுவினர் அமெரிக்காவில் முகாமிட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படியுங்கள்... ஒரு கை செத்துப்போச்சு... என்னை விஷ ஊசி போட்டு கொன்னுடுங்க...! கேன்சர் பாதிப்பால் கதறும் அங்காடி தெரு நடிகை

click me!