டேஞ்சரஸ் ராஜு... ஜெயிலின் உள்ளே நிற்கும் அரவிந்த் சுவாமி..! வெறித்தனமான போஸ்டரை வெளியிட்ட 'கஸ்டடி' படக்குழு!

Published : Mar 02, 2023, 11:27 PM IST
டேஞ்சரஸ் ராஜு... ஜெயிலின் உள்ளே நிற்கும் அரவிந்த் சுவாமி..! வெறித்தனமான போஸ்டரை வெளியிட்ட 'கஸ்டடி' படக்குழு!

சுருக்கம்

வெங்கட் பிரபு இயக்கத்தில் 'கஸ்டடி' படத்தில் நடிக்கும் அரவிந்த் சுவாமியின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை படக்குழு வெளியிட்டுள்ளது.  

முன்னணி இயக்குநரான வெங்கட்பிரபு இயக்கத்தில் தமிழ் - தெலுங்கு என பைலிங்குவலாக உருவாகி இருக்கும் 'கஸ்டடி' படத்தில் நடிகர் நாக சைதன்யா நடித்துள்ளார். இதன் படப்பிடிப்பு சமீபத்தில் முடிவடைந்தது. இதன் போஸ்ட் புரொடக்‌ஷன் பணிகள் தற்போது விறுவிறுப்பாக நடந்து வருகிறது. 

இப்படத்தில் இருந்து சமீபத்தில் வெளியான க்ளிம்ப்ஸ் பலருக்கும் பிடித்திருந்தது மற்றும் கீர்த்தி ஷெட்டியின் கதாபாத்திர போஸ்டர் படம் குறித்தான ஆர்வத்தையும் அதிகரித்துள்ளது. திறமையான நடிகரான அரவிந்த் சுவாமியின் கேரக்டர் போஸ்டரை இன்று தயாரிப்புத் தரப்பு வெளியிட்டுள்ளது அனைவரையும் மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

அழகூரில் பூத்தவளே... பாவாடை தாவணி அழகில் ரசிகர்கள் மனதை அலைபாய வைத்த கன்னக்குழி நடிகை சிருஷ்டி டாங்கே..!

இப்படத்தில் ராஜு என்ற ராசு  கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். மிகவும் வலுவான கதாபாத்திரம் மற்றும் பாரில் கைவிலங்குடன் இந்த போஸ்டரில் அரவிந்த் சுவாமி இருக்கிறார். இந்த அச்சுறுத்தும் தோற்றம் இந்த ஆக்‌ஷன் த்ரில்லர் படம் மீதான எதிர்பார்ப்பை அதிகப்படுத்தியுள்ளது. இப்படத்தில் கதாநாயகியாக கீர்த்தி ஷெட்டி நடித்துள்ளார். ப்ரியாமணி பவர்ஃபுல் ரோலில் நடித்துள்ளார். இப்படத்தில் சரத்குமார், சம்பத் ராஜ், பிரேம்ஜி, வெண்ணேலா கிஷோர், பிரேமி விஸ்வநாத் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.

அக்கினேனியின் சினிமா பயணத்திலேயே  அதிக பொருட்செலவில் எடுக்கப்பட்ட படங்களில் 'கஸ்டடி'யும் ஒன்று. ஸ்ரீனிவாசா சில்வர் ஸ்க்ரீன் பேனரின் கீழ் ஸ்ரீனிவாசா சித்தூரி இப்படத்தை மிகவும் பிரமாண்டமான முறையில் தயாரித்துள்ளார். அதிக தயாரிப்பு மதிப்புகள் மற்றும் தொழில்நுட்ப தரத்துடன் இப்படம் உருவாகியுள்ளது. இந்தப் படத்தை பவன்குமார் வழங்குகிறார். அபூரி ரவி வசனம் எழுத, எஸ்.ஆர் கதிர் ஒளிப்பதிவு செய்கிறார்.

அட்ஜஸ்ட்மென்ட் கேட்ட பிரபலம்.. நல்ல பொண்ணு மாதிரி சீன் போட்டுக்கு காசுக்கு நடிகரை கஸ்டமராக்கிய நடிகை!

கஸ்டடி திரைப்படம் மே 12, 2023 அன்று உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியிடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.  இதில் நாக சைதன்யா, கீர்த்தி ஷெட்டி, அரவிந்த் சாமி, பிரியாமணி, சரத் குமார், சம்பத் ராஜ், பிரேம்ஜி அமரன், வெண்ணேலா கிஷோர், பிரேமி விஸ்வநாத் மற்றும் பலர் நடித்துள்ளனர். இப்படத்தை ஸ்ரீனிவாசா சில்வர் ஸ்கிரீன் சார்பில், ஸ்ரீனிவாசா சித்தூரி தயாரித்துள்ளார். இப்படத்திற்கு மேஸ்ட்ரோ இளையராஜா, லிட்டில் மேஸ்ட்ரோ யுவன் ஷங்கர் ராஜா, இணைந்து இசையமைத்து வருகிறார்கள்.  எஸ்.ஆர்.கதிர் ஒளிப்பதிவு பணிகளை மேற்கொள்ள, வெங்கட் ராஜன் படத்தொகுப்பு செய்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

 

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories

சிலம்ப‘அரசன்’ ஆட்டம் ஆரம்பம்... அதகளமாக தொடங்கிய அரசன் ஷூட்டிங் - எங்கு தெரியுமா?
கிரிஷ் விவகாரத்தில் யாரும் எதிர்பார்க்காத முடிவை எடுத்த முத்து.. ஆடிப்போன மீனா - சிறகடிக்க ஆசை சீரியல் அப்டேட்