
பாலிவுட் திரை உலகில் முன்னணி நடிகையாக இருந்தவர் சுஷ்மிதா சென். தற்போது 47 வயதாகும் இவர் இதுவரை பல்வேறு காதல் கிசுகிசுவில் சிக்க்கி இருந்தாலும், இதுவரை திருமணம் செய்து கொள்ளாமல் உள்ளார். மேலும் இரண்டு குழந்தைகளை தத்தெடுத்து வளத்து வருகிறார்.
தன்னுடைய 18 வயதில் மாடலிங் துறையில் நுழைந்த இவர், மிஸ் யுனிவர்ஸ் பட்டத்தை 1994 ஆம் ஆண்டு வென்று உலகையே தன் பக்கம் திரும்பி பார்க்க வைத்தார். பின்னர் 1996 ஆம் ஆண்டில் பாலிவுட் திரை உலகில் நுழைந்த இவர், தமிழில் நடிகர் நாகார்ஜுனாவுக்கு ஜோடியாக 'ரட்சகன்' என்னும் படத்திலும் நடித்துள்ளார். கடைசியாக டிஸ்னி ஹாட் ஸ்டார் ஓடிடி தளத்தில் வெளியான ஆர்யா என்கிற வெப் சீரிஸில், கதையின் நாயகியாக நடித்திருந்தார் சுஷ்மிதா சென்.
இந்நிலையில் தற்போது இவர் சமூக வலைதளத்தில் போட்டுள்ள பதிவு பாலிவுட் மற்றும் கோலிவுட் ரசிகர்களை அதிர்ச்சியில் உறைய வைத்துள்ளது. கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு தனக்கு மாரடைப்பு ஏற்பட்டதாகவும், பின்னர் ஆஞ்சியோபிளாஸ்டி செய்யப்பட்டு, தற்போது தன்னுடைய இதயத்தில் ஸ்டன்ட் பொருத்தப்பட்டுள்ளதாக கூறியுள்ளார். அதேபோல் தனக்கு சற்று பெரிய இதயம் இருப்பதாக தன்னுடைய இருதய நோய் நிபுணர் உறுதிப்படுத்தி உள்ளதாகவும், தனக்கு சரியான நேரத்தில் உதவிய அனைவருக்கும் நன்றி தெரிவித்துள்ள சுஷ்மிதாசன், தற்போது நான் நலமாக இருக்கிறேன் என்பதை தெரிவிப்பதற்காகவே இந்த பதிவை பகிர்ந்துள்ளதாகவும், நான் மறுபடியும் வாழ தயாராக இருக்கிறேன் என உணர்வுபூர்வமாக பதிவிட்டுள்ளார். இந்த பதிவு தற்போது திரையுலகினர் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.