பிக்பாஸ் கவின் நடித்து கடந்த மாதம் 10 ஆம் தேதி வெளியான 'டாடா' படத்தை பார்த்த பின்னர், பிரபல நடிகர் கார்த்தி பட குழுவினரையும், கவினையும் பாராட்டி தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டு புகழ்ந்து தள்ளியுள்ளார்.
சின்னத்திரை மூலம் தன்னுடைய நடிப்பு பயணத்தை துவங்கியவர் கவின். பின்னர் ஒரு சில படங்களில் இவர் நடித்திருந்தாலும், அந்த படங்கள் எதிர்பார்த்த அளவுக்கு வெற்றி பெறாத நிலையில், சில படங்கள் வெளியாகாமலே போன்றது. எனினும் மக்கள் மனதில் இடம் பிடித்து, வெள்ளித்திரையில் நடிகராக வேண்டும் என்கிற ஆசையுடன், பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டார் கவின். ஆரம்பத்தில் எதிர்மறையான விமர்சனங்களை சந்தித்த கவின், பின்னர் மிகவும் பொறுமையாகவும் நிதானத்துடனும் விளையாடியதால் பட்டி தொட்டி எங்கும் பிரபலமானார்.
குறிப்பாக பிக்பாஸ் விளையாட்டில் லாஸ்லியா வெற்றி பெற வேண்டும் என்பதற்காக, 5 லட்சம் ரூபாயை எடுத்துக்கொண்டு பிக்பாஸ் நிகழ்ச்சியில் இருந்து வெளியேறினார். இவருடைய தியாகம் ஒட்டுமொத்த ரசிகர்களையும் இவரை கவனிக்க வைத்தது. பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு பின்னர், இவர் நடிப்பில் வெளியான திகில் திரைப்படமான லிப்ட் ஹாட்ஸ்டார் ஓடிடி தளத்தில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்ற நிலையில், கடந்த மாதம் 'டாடா' திரைப்படம் வெளியானது.
காதல், குழந்தை மீதான பாசம், எமோஷன், காமெடி போன்ற கலவியான உணர்வுகளுடன் வெளியான இந்த படத்தில், கவினுக்கு ஜோடியாக பிரபல மலையாள நடிகை அபர்ணாதாஸ் நடித்திருந்தார். பிப்ரவரி மாதம் 10ஆம் தேதி வெளியான இந்த படத்தை ,ரெட் ஜெயன்ட் மூவிஸ் நிறுவனம் தமிழகம் முழுவதும் பிரம்மாண்டமாக வெளியிட்டது. ரிலீஸ் ஆனது முதலே தொடர்ந்து பாசிட்டிவ் விமர்சனங்களை பெற்று வந்த இப்படம் வசூல் ரீதியாகவும் வெற்றி பெற்றது.
ரஜினிக்கு தங்கையாக 25 ஆண்டுகளுக்கு பின் ரீ-என்ட்ரி கொடுக்கும் பிரபல நடிகரின் மனைவி!
இந்நிலையில், பிரபலங்கள் பலர் படத்தை பார்த்துவிட்டு தங்களுடைய விமர்சனங்களை தெரிவித்து வந்தனர். ஏற்கனவே நடிகர் தனுஷ், போன் செய்து நடிகர் கவினை வாழ்த்திய நிலையில் தற்போது நடிகர் கார்த்தி twitter பக்கத்தின் மூலம் தன்னுடைய வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் போட்டுள்ள பதிவில், என்ன ஒரு அருமையான படம், படத்தை எழுதி இயக்கிய விதம் பார்ப்பதற்கே மிகவும் அருமையாக இருந்தது. ஒவ்வொருவரும் தங்களுடைய சிறந்த நடிப்பை வெளிப்படுத்தி இருந்தனர். குறிப்பாக நடிகர் கவின் தன்னுடைய முழுமையான நடிப்பை அழகாக வெளிப்படுத்தி இருந்தார். பட குழுவினருக்கு வாழ்த்துக்கள். இந்த படத்தை நினைத்து மிகவும் பெருமை கொள்வதாக தெரிவித்திருந்தார்.
இதைத்தொடர்ந்து நடிகர் கவின், நன்றி கூறும் விதமாக போட்டிருந்த பதிவில்... "நீங்கள் அழைத்த ஐந்து நிமிட அழைப்பில் என்னை பற்றி நீங்கள் சொன்ன எல்லாவற்றிலும், இந்த ஒரு விஷயத்தை மட்டுமே என்னால் எப்போதும் நினைவில் வைத்திருக்க முடியும். நான் இந்த படத்தை நினைவில் கொள்கிறேன் மற்றும் நான் அதை உங்களுக்கு தெரிவிக்க விரும்புகிறேன் எப்போதும் மறக்க மாட்டேன் கார்த்தி சார் என தெரிவித்துள்ளார்.
It was a five minute call. Amongst the everything you told me, I can only remember this one thing forever - “I will remember this film”
And I want to let you know that I will never forget this, sir ♥️🙏🏼 🔥 https://t.co/ifyhLUtswS pic.twitter.com/arLCZjs9Br