நடிகரும் இயக்குனருமான பார்த்திபன், இயக்கி நடித்திருந்த 'இரவின் நிழல்' திரைப்படம் தான் உலகிலேயே நான் லீனியர் முறையில் எடுக்கப்பட்ட, முதல் சிங்கிள் ஷாட் திரைப்படம் என கூறப்பட்ட நிலையில், இது இரண்டாவது நான் லீனியர் திரைப்படம் என அவரை அசிங்கப்படுத்துவது போல் அமேசான் ப்ரைம் தளத்தில் பதிவிடப்பட்டுள்ளது.
நடிகரும் இயக்குனருமான பார்த்திபன், இயக்கி நடித்திருந்த 'இரவின் நிழல்' திரைப்படம் தான் உலகிலேயே நான் லீனியர் முறையில் எடுக்கப்பட்ட, முதல் சிங்கிள் ஷாட் திரைப்படம் என கூறப்பட்ட நிலையில், இது இரண்டாவது நான் லீனியர் திரைப்படம் என அவரை அசிங்கப்படுத்துவது போல் அமேசான் ப்ரைம் தளத்தில் பதிவிடப்பட்டுள்ளது.
நடிகர் பார்த்திபன் இயக்கி நடித்த 'இரவின் நிழல்' திரைப்படம் கடந்த ஜூலை 15ஆம் தேதி திரையரங்குகளில் பிரம்மாண்டமாக வெளியாகி, ரசிகர்கள் மத்தியில் நல்ல ஆதரவை பெற்ற நிலையில்... இந்த படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் தொடர்ந்து பாராட்டுக்கள் குவிந்தது. மேலும் இந்த படம் தான் உலகிலேயே நான் லீனியர் முறையில் எடுக்கப்பட்ட முதல் சிங்கிள் ஷாட் திரைப்படம், எனக் கூறி... நடிகர் பார்த்திபன் விளம்பரப்படுத்தி வந்தார்.
பார்த்திபனின் இந்த கருத்துக்கு ஏற்கனவே எதிர்ப்பு தெரிவித்த பிரபல திரைப்பட விமர்சகர் ப்ளூ சட்டை மாறன், நான் லீனியர் முறையில், ஏற்கனவே கடந்த 2013 ஆம் ஆண்டு வெளியான 'பிஷ் அண்ட் கேட்' என்ற ஈரானிய படம் முதல் சிங்கிள் ஷாட் திரைப்படம் என கூறினார். இவரின் இந்த கருத்துக்கு பார்த்திபனின் ரசிகர்கள் அப்போது பொங்கி எழுந்து தங்களுடைய வெறுப்பை வெளிக்காட்டினர்.
Bipasha Basu: 43 வயதில் முதல் குழந்தையை பெற்றெடுத்த விஜய் பட நடிகை..! குவியும் ரசிகர்கள் வாழ்த்து..!
இந்நிலையில் நேற்று இரவின் நிழல் படத்தை அமேசான் பிரைம் வெளியிட்டுள்ள நிலையில், அமேசான் ப்ரைம் தளத்திலும், IMDB தளத்திலும் நடிகர் பார்த்திபன் தொடர்ந்து 'இரவின் நிழல்' திரைப்படம் முதல்முறையாக எடுக்கப்பட்ட நான் லீனியர் சிங்கிள் ஷாட் திரைப்படம் என கூறி வருவது உண்மை அல்ல என்றும், இது இரண்டாவது நான் லீனியர் படம் என தெரிவித்துள்ளது. இதனை ப்ளூ சட்டை மாறனும் தன்னுடைய சமூக வலைதள பக்கத்தில் வெளியிட்டு 'வாய்மையே வெல்லும்' என பதிவிட்டுள்ளார். இந்த பதிவு தற்போது சமூக வலைதளத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளதோடு நடிகர் பார்த்திபன் பொய் சொன்னாரா? என்கிற கேள்வியையும் எழ செய்துள்ளது.