ஒதுக்கிய மத்திய அரசு…. அரவணைத்த புதுச்சேரி அரசு ! பரியேறும் பெருமாள் படத்துக்கு விருது அறிவித்த நாராயணசாமி !!

Published : Sep 10, 2019, 07:01 PM IST
ஒதுக்கிய மத்திய அரசு…. அரவணைத்த புதுச்சேரி அரசு ! பரியேறும் பெருமாள் படத்துக்கு விருது அறிவித்த நாராயணசாமி !!

சுருக்கம்

சிறந்த படத்துக்கான விருது கிடைக்கும் என  மிகுந்த எதிர்பார்ப்பு இருந்த நிலையில், மத்திய அரசு நிராகரித்த பரியேறும் பெருமாள் திரைப்படத்துக்கு புதுச்சேரி அரசின் சங்கரதாஸ் சுவாமிகள் விருது அறிவிக்கப்பட்டுள்ளது.  

கடந்த ஆண்டு தமிழ் திரையுலகில் பல நல்ல திரைப்படங்கள் வெளியாகின. பரியேறும் பெருமாள், 96, பேரன்பு போன்ற படங்கள் விருதுக்குரிய படங்களாக கருதப்பட்டன. ஆனால் மத்திய அரசு அறிவித்த விருதுப் பட்டியலில் ஒரு தமிழ் சினிமா கூட இடம்பெறவில்லை. இது தமிழ் திரையுலகினரை அதிர்ச்சியில் ஆழ்த்தியது. ஒருசிலர்  தமிழ் திரையுலகம் ஒட்டுமொத்தமாக புறக்கணிக்கப்பட்டுள்ளதாக ஆதங்கத்தை வெளிப்படுத்தினர்.

இந்நிலையில்  இயக்குநர் மாரி செல்வராஜ் இயக்கத்தில் வெளிவந்த பரியேறும் பெருமாள் திரைப்படத்திற்கு புதுச்சேரி அரசின் சங்கரதாஸ் சுவாமிகள் விருது அறிவிக்கப்பட்டுள்ளது.

இயக்குநர் மாரி செல்வராஜ் இயக்கத்தில், கதிர் நடிப்பில் கடந்த ஆண்டு வெளியான திரைப்படம் பரியேறும் பெருமாள். சாதியக் கொடுமையை பற்றி ஆழமாக பேசியிருந்த இந்த திரைப்படம் பல்வேறு விருதுகளைப் பெற்றது

இந்நிலையில், புதுச்சேரி அரசின் சங்கரதாஸ் சுவாமிகள் விருது பரியேறும் பெருமாள் திரைப்படத்திற்கு வழங்கப்பட இருக்கிறது. வரும் 13ஆம் தேதி நடக்க இருக்கும் விழாவில் முதலமைச்சர் நாராயணசாமி இயக்குநர் மாரி செல்வராஜூக்கு இவ்விருதை வழங்க இருக்கிறார். 

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories

யார் இந்த அதிரே அபி? மெகா ஸ்டார் பிரபாஸுடன் இவருக்கு இவ்வளவு நெருக்கமா? வைரலாகும் பின்னணி!
15 வருடங்களாக நாகார்ஜுனாவை வாட்டும் நோய்! ஏன் இன்னும் குணமாகவில்லை? கவலையில் ரசிகர்கள்!