சாதி வன்மத்தை தூண்டுகிறாரா..? இயக்குநர் பா.ரஞ்சித்துக்கு உச்சநீதிமன்ற நீதிபதி ஆதரவு..!

Published : Sep 10, 2019, 06:17 PM IST
சாதி வன்மத்தை தூண்டுகிறாரா..? இயக்குநர் பா.ரஞ்சித்துக்கு உச்சநீதிமன்ற நீதிபதி ஆதரவு..!

சுருக்கம்

ராஜராஜ சோழன் குறித்து இயக்குநர் பா.ரஞ்சித் பேசியதால் அவர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டிருப்பது தவறான முன்னுதாரணம் என உச்சநீதிமன்ற நீதிபதி தீபக் குப்தா தெரிவித்துள்ளார்  

ராஜராஜ சோழன் குறித்து இயக்குநர் பா.ரஞ்சித் பேசியதால் அவர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டிருப்பது தவறான முன்னுதாரணம் என உச்சநீதிமன்ற நீதிபதி தீபக் குப்தா தெரிவித்துள்ளார்

தனது உரையொன்றில் தெரிவித்திருக்கிறார். தேசத்துரோக வழக்குகள் எப்படியெல்லாம் தவறாக பயன்படுத்தப்படுகின்றன என்பதற்கு உதாரணங்களை சொல்லும்போது, இயக்குநர் ரஞ்சித் மீது போடப்பட்ட வழக்கை மற்றுமொரு மிக மோசமான முன்னுதாரணம் என்று குறிப்பிட்டுள்ளார்.

நீதிபதி தீபக் குப்தா, குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் நடந்த கருத்தரங்கில் பேசினார். அப்போது, ‘’அன்பை சட்டத்தால் உருவாக்கவோ அல்லது கட்டுப்படுத்தவோ முடியாது. ஒரு நபர் அல்லது அமைப்பு மீது ஒருவருக்கு அன்பு இல்லையென்றால், அவர் வன்முறையைப் பற்றி சிந்திக்கவோ, ஊக்குவிக்கவோ அல்லது தூண்டவோ செய்யாதவரை, ஒருவர் தனது அதிருப்திக்கு வெளிப்படுத்த முழுசுதந்திரம் கொடுக்கப்படவேண்டும்.

இன்று வன்முறையைத் தூண்டாமல் வெறுமனே விமர்சிப்பது தேசத்துரோகத்திற்கு சமமல்ல. தேசத்துரோக சட்டம் பெரும்பாலும் துஷ்பிரயோகம் செய்யப்படுவதோடு, தவறாக பயன்படுத்தப்படுகிறது. அதிகாரத்தில் இருப்பவர்களை விமர்சிக்கும் நபர்களை காவல்துறையினரால் கைது செய்யப்படுகிறார்கள், நீதிமன்றத்தில் இருந்து ஒருவர் ஜாமீன் பெற்றாலும் கூட, அவர் சிறைக்கு அனுப்பப்படும் அவலமான சம்பவங்கள் இங்கே ஏராளமாக நடக்கின்றன. 

மோசமான உதாரணம், சாதி பகைமையைத் தூண்டுவதற்காகக் கூறி ஐ.பி.சி 153 மற்றும் 153 ஏ பிரிவுகளின் கீழ் தமிழகத்தில் ஒரு திரைப்பட இயக்குனர் பா.ரஞ்சித் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது. ஏனென்றால், சோழ வம்ச மன்னர் ஒருவர் சாதி ஒடுக்குமுறையை நிகழ்த்தினார் என்று அவர் பேசியதாக குற்றச்சாட்டு கூறப்பட்டது. இந்த சோழ வம்ச மன்னன் ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்தான் என்பதை நாம் நினைவில் கொள்ள வேண்டும்’’  என அவர் தெரிவித்துள்ளார். 


 

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories

விஜய் முதல் கார்த்தி வரை... 2025-ம் ஆண்டு ‘ஜீரோ’ ரிலீஸ் உடன் ஏமாற்றம் அளித்த டாப் ஹீரோக்கள்
ஓவர் குஷியில் உண்மையை உலறிய ரோகிணி... கிரிஷின் அப்பாவாக மாறிய மனோஜ் - சிறகடிக்க ஆசை அப்டேட்