
விஜய் டிவி தொலைக்காட்சியில் விறுவிறுப்புக்கு குறைவில்லாமல் ஒளிபரப்பாகி வரும், பிக்பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியில், கலந்து கொண்டு 16 போட்டியாளர்களில் ஒருவராக, விளையாடியவர் நடிகை ஜாங்கிரி மதுமிதா. இவர் உள்ளே இருந்த போது, ஒரு சில பிரச்சனைகள் வந்தாலும் இவருக்கு மக்கள் தொடர்ந்து ஆதரவு கொடுத்தனர்.
இந்நிலையில், 'ஹெலோ' டாஸ்க் நடந்த போது, மதுமிதா காவிரி தண்ணீர் பிரச்சனை குறித்து தன்னுடைய கருத்தை தெரிவித்தார். இந்த காட்சி பிக்பாஸ் நிகழ்ச்சியில் ஒளிபரப்பவில்லை. மேலும், இதுகுறித்து பிக்பாஸ் வீட்டில் உள்ள மற்ற போட்டியாளர்களும் கடுமையாக மதுமிதாவை சாடியதாக கூறப்படுகிறது.
இதனால், தற்கொலை செய்து கொள்ள தன்னுடைய கைகளை கத்தியால் கடுமையாக கிழித்துக்கொண்டார். இதனால் பிக்பாஸ் வீட்டின் விதியை மீறியதாக அதிரடியாக வெளியேற்றப்பட்டார்.
பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியேறியதும், சம்பள பிரச்சனை காரணமாக, பிக்பாஸ் நிகழ்ச்சியில் நடத்திய டிவி நிர்வாகம் மதுமிதா மீது புகார் கொடுத்தது. இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய மது, தான் இதுவரை பிக்பாஸ் விதியை மீறவில்லை என பேட்டி கொடுத்து இந்த பிரச்சனைக்கு முற்று புள்ளி வைத்தார்.
இந்நிலையில், இதுவரை மது கையை கிழித்துக்கொண்ட காட்சியோ, அவரது கையில் உள்ள காயங்களோ இதுவரை, வெளியே காட்டப்படாத நிலையில், முதல் முறையாக மதுமிதா தன் கையை மிகவும் கொடூரமாக கிழித்து கொண்ட புகைப்படம் வெளியாகி மதுமிதா ரசிகர்களை அதிர்ச்சியடைய செய்துள்ளது.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.