
மழை அனைவரையும் பலரையும் அவஸ்தைக்கு உள்ளாக்கி வருகிறது. திரைத்துறையினரையும் திகைக்க வைத்துள்ளது. பலரும் வீட்டுக்குள் முடங்கிக் கிடக்கின்றனர். அவர்களின் இன்னல்களை அறிந்து தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கத்தின் நிர்வாகியான செளந்தர பாண்டியன் வீட்டில் தயாரிப்பாளர் சங்க உறுப்பினர்களான 150 க்கும் மேற்பட்டோருக்கு நிவாரணப் பொருட்களை வழங்கி மகிழ்ந்துள்ளனர்.
அந்த விழாவில், தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத்தினரும், திரைப்பட நடிகருமான, சேப்பாக்கம், திருவல்லிக்கேணி சட்டமன்ற திமுக உறுப்பினருமான உதயநிதி ஸ்டாலின் பிறந்த நாளை முன்னிட்டு தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்களான செளந்திர பாண்டியன், சிங்காரவேலன், விஜயமுரளி, பார்த்திபன், வி.சேகர், பட்டுக்கோட்டை சாமிநாதன், பாலாஜி, அஷோக் ஆகியோர் கலந்து கொண்டனர். தென்னிந்திய நடிகர் சங்க அறக்கட்டளை குழு உறுப்பினரும், தென்னிந்திய நடிகர்கள் கூட்டுறவு வீட்டு வசதி சங்க தலைவரும், திமுக தலைமை நிலையச் செயலாளருமான பூச்சி.எஸ்.முருகன் நிவாரணப் பொருட்களை தலைமையேற்று வழங்கினார். தயாரிப்பாளர் செளந்தர பாண்டியன் வீட்டில் நடந்த இந்த நிகழ்வில் தயாரிப்பாளர் சங்கத்தை சேர்ந்த பலரும் நிவாரணப்பொருட்களை பெற்றுச் சென்றனர்.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.