Bigg Boss 5 பிக் பாஸ் ரூலை மதிக்காத அண்ணாச்சி; தலைவர் பதவியை பறித்ததால் வெடித்த பிரச்சனை!!

Kanmani P   | Asianet News
Published : Nov 30, 2021, 09:44 AM IST
Bigg Boss 5 பிக் பாஸ் ரூலை மதிக்காத அண்ணாச்சி; தலைவர் பதவியை பறித்ததால் வெடித்த பிரச்சனை!!

சுருக்கம்

BiggBossTamil5 தலைவர் சொல்லும் வேலையை செய்ய முடியாது என அண்ணாச்சி பிக் பாஸ் வீட்டையே ரணகளப்படுத்தி வருகிறார்.

ரசிகர்களின் கணிப்பு படியே கடந்த வாரம் "ஜக்கி பெரி" தான் வெளியேறியுள்ளார். தற்போது கமலுக்கு பதிலாக பிக் பாஸ் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வரும் ரம்யா கிருஷ்ணனால் வெளியில் அனுப்பப்பட்ட முதல் நபர் இவர்தான். இவருடன் சேர்த்துநாடியா, நமிதா மாரிமுத்து, அபிஷேக், சின்னப்பொண்ணு, சுருதி  மதுமிதா மற்றும் இசைவாணி  என 8 நபர்கள் வீட்டை விட்டு வெளியேறியுள்ளனர்.

இந்நிலையில் நேற்று நடைபெற்ற எபிசோட்டில் இந்த வார தளிவருக்கான போட்டி நடைபெறுகிறது. அதில் இதில், இமான், சிபி, அபிஷேக் ஆகியோர் போட்டியில் கலந்து கொண்டனர். சிறப்பாக விளையாடி இமான் இந்த வாரத்திற்கான தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டபோது, ஆளுமையை பயன்படுத்தி நிரூப் இமானின் தலைவர் பதவியை தட்டி பறிக்கிறார்.

இதனால் செம கடுப்பாகிறார் அண்ணாச்சி. பின்னர் நிரூப் ஹவுஸ் மேட்டுக்கான பணிகளை பிரித்து கொடுக்கிறார். அப்போது நீ சொல்ற வேலையெல்லாம் கேட்க முடியாது என கத்துகிறார். இதையடுத்து தனது நாணயத்தின்  பவரை அபிஷேக்கிடம் தருவதாக நிரூப் கூற மேலும் சூடேறிய அண்ணாச்சி நீ  நீ சொல்றதை எல்லாம் விஷயத்தை ஏற்றுக்கொள்ள முடியாது என்கிறார். பிக் பாஸ் வீட்டின் இந்த வார கேப்டன் நான் தான், நான் என்ன சொல்றேனோ அதை நீங்கள் செய்துதான் ஆகனும் என்று ஆர்டர் போட்டார். 

இதனால் மிகுந்த கோபத்தில் செய்துதான் ஆகனும்னு ஆர்டர் போட்டா என்னால செய்ய முடியாது, நான் செய்ய மாட்டேன், என்ன செய்வ நீ, உன்னால என்ன செய்ய முடியுமோ அதை செய்துக்கோ என்று உச்ச கட்ட டென்ஷனில் கத்தினார் அண்ணாச்சி இதனால், நிரூப் பிக் பாஸ் அண்ணாச்சி பற்றி பிக்பாஸிடம் புகார் கூறினார். இதனால் பிக் பாஸ் வீடே ரணகளமானது.

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories

ஜனனிக்காக விசாலாட்சி எடுக்கும் ரிஸ்க்; சுத்துபோட்ட போலீஸ்... சிக்கினாரா குணசேகரன்? எதிர்நீச்சல் தொடர்கிறது
டாக்டருக்கு டாக்டர்; ஜோடி பொருத்தம் சூப்பர்; சரண்யா பொன்வண்ணனின் மகள் நிச்சயதார்த்த போட்டோஸ்!