
பாண்டியன் ஸ்டோர்ஸ் என்பது விஜய் தொலைக்காட்சியில் அக்டோபர் 1, 2018 ஆம் ஆண்டு முதல் திங்கள் முதல் சனி வரை ஒளிபரப்பாகும் தொலைக்காட்சி நாடகத் தொடர் ஆகும்.
இது அண்ணன் தம்பிகள் 4 பேரைச் சுற்றி அமையும் கதைக்களம் ஆகும். இந்த தொடரில் ஸ்டாலின், சுஜிதா, குமரன் தங்கராஜன், வெங்கட் ரங்கநாதன்,ஹேமா ராஜ்குமார், சரவணன் விக்ரம் மற்றும் பலரும் நடித்து வருகின்றனர்..
பாண்டியன் ஸ்டோர்ஸ் என்னும் மளிகை கடை ஒன்றை நடத்தி வருகின்றனர் அண்ணன், தம்பி நால்வர். இந்த குடும்பத்தின் மூத்த மருமகள் தனலட்சுமி. அனைவரையும் அன்பால் அரவணைப்பவர். தன் கணவரின் தம்பிகளை, தன் பிள்ளைகள் போல் பார்த்துக் கொள்வார். இந்த குடும்பத்தில் மற்ற மருமகளாக வரும் மீனா, முல்லை ஆகியோரால் இவர்களின் மகிழ்ச்சியும், ஒற்றுமையும் நீடிக்குமா? என்பதுதான் இந்த தொடரின் கதை.
இந்த நாடகத்தில் ஸ்டாலின் (மூர்த்தி), சுஜிதா- தனம், வெங்கட் ரங்கநாதன் - ஜீவா, குமரன் தங்கராஜன் - கதிர், ஹேமா ராஜ்குமார் - மீனா, காவியா - முல்லை, சரவணன் விக்ரம் - கண்ணன் என நடித்து வருகின்றனர்...
தற்போது கண்ணனும் ஐஸ்வர்யாவும் காதல் திருமணம் செய்து கொள்ள முதலில் ஏற்க மறுத்த குடும்பம் பின்னர் அவர்களை சேர்த்துக்கொண்டுள்ளது.. ஆனால் ஐஸ்வர்யா துடுக்காக பேசுபவர் என்பதால் அவ்வப்போது உறுப்பினர்களை சங்கடத்துக்கு உள்ளாக்கி வருகிறார்.. இவ்வாறு பல திருப்பங்களுடன் விறுவிறுப்பாக சென்றுகொண்டிருக்கிறது..
இந்நிலையில் படப்பிடிப்புக்காக தயாராகி வரும் தனம், மீனா, முல்லை, ஜீவா, கதிர் அனைவரும் அழாகான மூமென்ட் போடும் வீடியோ வெளியாகியுள்ளதுள்ளது..
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.