மதராசபட்டணத்தில் துவங்கி 2.0 வரையில் தன் கன்னாபின்னா கவர்ச்சியால் தமிழ் திரையுலகை கதிகலங்க வைத்த எமி ஜாக்சன் திடுதிப்புன்னு இங்கிலாந்தில் தன் காதலருடன் லிவிங் டுகெதரில் இணைந்தார் , ஒரு ஆண் குழந்தையை பெற்றார் . இந்நிலையில் , கோவில் வாசலில் யானை ஒன்று சங்கிலியால் கட்டி வைக்கப்பட்டுள்ள வீடியோவை வெளியிட்டு ‘ பாவம் அடிக்காதிங்க ’ என்று கெஞ்சிக் கதறியுள்ளார் இன்ஸ்டாவில் . (எமி வருத்தப்படுவார்னா நாம கூட எத்தனை அடின்னாலும் வாங்கலாம்ல)
விஷாலும் , வரலெட்சுமி சரத்குமாரும் லவ்விய கதை உலகம் அறிந்தது . அப்பாலிக்கா தாங்கள் இருவரும் நண்பர்கள் என்றார்கள் . இந்நிலையில் விஷாலுக்கு ஒரு நிச்சயதார்த்தம் நடந்து , அது நின்று போனது . இப்போது மீண்டும் வருவும் , விஷாலும் ஜாலி டிரைவிங் , டேட்டிங் என்று சுற்றுவதாக தகவல் . (அந்த ஹைட்டுக்கு இந்த வெயிட்டுதான் சரியான மேட்ச் பா)
சிநேகாவுக்காக இப்பவும் ஒரு பெரிய ரசிகப்பட்டாளம் இருக்கிறது . பிரசன்னாவை டாவடித்து , கல்யாணம் பண்ணி , ரெண்டு பிள்ளைங்களுக்கு அம்மாவான சிநேகா சில விளம்பரங்களில் நடிக்கிறார் . ஆனால் அவரை மீண்டும் மெயின் லைன் சினிமாவுக்குள் இழுத்து வர ஒரு முக்கிய நடிகர் ஓவராய் துடிக்கிறாராம் . யார் அவர் ? என்பதுதான் இப்ப புதிரே . (பிரசன்னாவை பல பேரு சாக்லேட் பாயின்னு நினைச்சுட்டு இருக்கானுவ. பாவம்!)
தமிழ்சினிமாவில் விஜய்யில் துவங்கி பலருக்கு வாழ்க்கை கொடுத்த தயாரிப்பு நிறுவனம் சூப்பர் குட் ஃபிலிம்ஸ் . ஆனால் அதன் உரிமையாளர் ஆர் . பி . செளத்ரியின் மகன்களான ஜீவா , ரமேஷ் இருவருக்கும் சினிமா கைகொடுக்கவில்லை . அதிலும் பெரிதாய் எதிர்ப்பார்க்கப்பட்டு , நன்கு வளர்ந்த ஜீவாவால் சமீபமாய் தாக்கே பிடிக்க முடியவில்லை . இதனால் விஜய்யோடு சேர்ந்து ஜீவாவை நடிக்க வைக்க செளத்ரியே தளபதிக்கு போன் போட்டாராம் . ஆனால் ஃபேவரைட் பதில் வரவே இல்லையாம் . ( சூர்யவம்சம் சீசன் 2 எடுப்போமா செளத்ரி சார்? அந்த பிக் அங்கிள் பர்ஃபார்மென்ஸுக்காகவே படம் பிய்ச்சுகினு ஓடும்)
சமந்தா – நாகசைதன்யா விவாகரத்து டிரெயின் திடீர்ன்னு யூ டர்ன் போட்டு மீண்டும் காதல் ரூட்டில் வந்து நின்னுடும் போல இருக்குது . சமீபத்திய பேட்டி ஒன்றில் சமந்தாவுக்காக இலை மறை காயாக உருகி ஓடியிருந்தார் நாக சைதன்யா . அதன் விளைவாக தனது சோஷியல் மீடியாவிலிருந்து சமந்து அந்த விவாகரத்து தொடர்பான அறிவிப்பை நீக்கினார் . ஆக மீண்டும் இந்த ஜோடி இணையலாம் ! என்கிறார்கள் . (அப்படின்னா பாத் டப்புல ரோசாப்பு மிதக்க, சமந்தா குளிக்கிற வீடியோ சீசன் 2 வருமுன்னு சொல்லு)
Subscribe to get breaking news alertsSubscribe தமிழ் சினிமா (Tamil Cinema News) , டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows) , செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review) , நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.